சிறீநகர், அக்.10- காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவதே புதிய அமைச்சரவையின் முதலாவது பணியாக இருக்க வேண் டும் என தேசிய மாநாடு துணைத்தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
காஷ்மீர் யூனியன் பிரதேசத் தில் நடந்த முதலாவது சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள் ளது. தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும். மேனாள் முதலமைச்சருயமான உமர் அப்துல்லா புதிய முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சிறீநகரில் நேற்று (9.10.2024) அவர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் தேர்தலில் மிகவும் கவனமாகவும், உணர்வுடனும் ஓட்டளித்து இருக்கும் வாக்கா ளர்களுக்கு நன்றி. குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சிகளை நிறுத்தி வாக்குகளை பிரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பகு திகளில் வாக்காளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு உள்ளனர். காஷ்மீரில் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக ஜன நாயகம் செழிக்க அனுமதிக் கப்படவில்லை. காஷ்மீரில் இனி எங்கள் பொறுப்புகள் தொடங்கும்.
புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் 10.10.2024 அன்று நடக்கிறது. அதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடத்தி கூட்டணியின் தலைவர் தேர்ந் தெடுக்கப்படுவார். அவர் தனக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களின் கடிதத்துடன் துணை நிலை ஆளுநரை சந்தித்து புதிய அரசு பதவியேற்பு விழாவுக் கான தேதியை முடிவு செய்வார். இது விரைவில் நடைபெற வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இங்கு தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசு இல்லை. எனவே பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட் டது.
புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் நடைமுறை கள் அனைத்தும் பின்பற்றப் படும். இந்த விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முடிவே இறு தியானது.
காஷ்மீருக்கு மாநிலத் தகுதி பெறுவதே புதிய அரசின் முதல் பணியாக இருக்கவேண் டும். காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவதே புதிய அமைச்சரவையின் முதல் பணி யாக இருக்க வேண்டும்.
பின்னர் அந்த தீர்மானத்து டன் முதலமைச்சர் டில்லி சென்று நாட்டின் மூத்த தலை மையை சந்தித்து தங்கள் வாக் குறுதியை நிறைவேற்ற வலியு றுத்த வேண்டும்.
காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்படும் என பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஏற்ெகனவே வாக்குறுதி அளித்து உள்ளனர். எனவே அது விரை வில் நடக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
-இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.