நீடாமங்கலம், அக். 10- தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கழகப்பொதுக்கூட்டம் 28.9.2024 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு கழக ஒன்றியச் செயலாளர் சதா.அய்யப்பன் வரவேற்புரை ஆற்றினார். கழகப்பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர்
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கணேசன்,மாவட்ட .ப.க. அமைப்பாளர் தங்க.வீரமணி, ப.க. மாவட்டச் செயலாளர் நா.உ.கல்யாணசுந்தரம், ஒன்றிய கழக தலைவர் தங்க.பிச்சக்கண்ணு, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ்,,ஒன்றிய கழக அமைப்பாளர் மா.பொன்னு சாமி, மன்னை ஒன்றிய கழக தலைவர் மு.தமிழ்ச்செல்வன், ப.க. நீடா ஒன்றியத் தலைவர் நா.இரவிச்சந்திரன், கழக நீடா நகர தலைவர் வா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்துக் கட்சிகளின் சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் . நீலன் அசோகன், அதிமுக. நகரத் தலைவர் இ.ஷாஜகான்,தேமுதிக. ஒன்றியச் செயலாளர் . தங்க.கோபி. தமுஎச . மாவட்டத்துணைத் தலைவர்.சு.அம்பிகாபதி ஆகியோர் கருத்துரை ஆற்றினர் .
கூட்டத்தை தொடங்கி வைத்து கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். தந்தை பெரியாரின் பணிகள் பற்றியும் அவர் கொள்கைகளை .ஆட்சியில் அமர்ந்த திமுக, அதிமுக கட்சிகள் எந்த வழிகளில் எல்லாம் செயல்படுத்தினார்கள் என்றும் சிறப்பாக எடுத்துக் கூறி தொடக்கவுரை ஆற்றினார்.
தொடர்ந்து கழகப் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வம் உரையில், தந்தை பெரியாரின் அரும்பணிகள் பற்றியும், சுயமரி யாதை இயக்க சாதனைகள் பற்றியும் சிறப்புடன் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட துணைச்செயலாளர்
வி.புட்பநாதன் , பகுத்தறிவாளர்களாக மாவட்ட துணைச் செயலாளர் இரா.கோபால், திராவிடர்கழக .மேனாள் ஒன்றியச் செயலாளர் க.கலியமூர்த்தி, மேலவாசல் திரிசங்கு, பெ.அன்புச்செல்வன், வாஞ்சூர் இளங்கோவன், மன்னார்குடி நகர ப.க. தலைவர் கோவி.அழகிரி,கோட்டூர் ஒன்றிய தலைவர் எம்.பி.குமார், கோட்டூர் ஒன்றிய ப.க. தலைவர். செ.இராமலிங்கம், செருகளத்தூர் ரா.சாஸ்திரிகா, இளைஞரணி மாவட்டத்தலைவர் க.இராஜேஷ்கண்ணன். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் க.இளங்கோவன், இளைஞரணி நீடா. நகரத் தலைவர் இரா.அய்யப்பன், மாணவரணித் தோழர் பா.பாலகிருஷ்ணன், நீடா. மாணவர் கழகத்தோழர் பா.சபேஷ், காளாச்சேரி .மாணவரணித்தோழர் மு.மாதேஷ், நீடா. ஒன்றிய து.தலைவர் எடமேலையூர் பி.வீரசாமி, எடமேலையூர். ஆர்.லெட்சுமணன், புலவர் கோ.செல்வம். வடுவூர் த.ஆசையொளி, து.உலகநாதன், பூவனூர் தோழர் சந்திரசேகர், வடுவூர் லோ.துரைச்செல்வன், பெரியகோட்டை சே.சுருளிராஜன், ப.க. நீடா ஒன்றியச் செயலாளர் க.முரளி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். கூட்டத் தொடக்கத்தில் பேராவூரணி சோம.நீலகண்டனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக நகர கழக செயலாளர் கி.இராஜேந்திரன் நன்றி கூறினார்.