சென்னை,ஆக.2 – “தகைசால் தமிழர்” விருது பெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரசு கட்சியின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவரும், திருப் பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய கு.செல்வப் பெருந்தகை வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ் நாடு அரசு சார்பாக 2023ஆம் ஆண் டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் திரு கி.வீரமணி அவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள் கிறேன். விருதிற்கு தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுவயதிலேயே பொது வாழ்க் கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகு பாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடு பட்டு, நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர்.
1962-இல் விடுதலை நாளிதழ் ஆசி ரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும் இருந் துள்ளார்.
இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங் கிணைத்து தந்தை பெரியாரின் பணியைத் தொடர்ந்து செய்து வரு கிறார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகிறார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமூகத் திற்கும் மிகச்சிறந்த முறையில் பணி யாற்றி வரும் – பொருத்தமான ஒரு வரையே தகைசால் விருதுக்கு தேர்வு செய்துள்ள தேர்வுக்குழுவினருக்கும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல மைச்சர் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
– இவ்வாறு கு.செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.