தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு:
மணிகண்டம் ஒன்றியம்
சோமு அரசன் பேட்டையில்…
கடந்த 17~09~2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10. 00 மணியளவில் மாவட்ட காப்பாளர் மு.நற்குணம் தலைமையில் சோம அரசன் பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் தி.மு.க. தோழர்களும், கம்யூனிஸ்ட் தோழர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் மு.நற்குணம் மாவட்ட காப்பாளர், சா.செபஸ்தியான், ஒன்றிய கழக தலைவர். சி.திருஞானசம்பந்தம், ஒன்றிய கழக செயலாளர் சு.மகாமணி, மாவட்ட இ.அணி செயலாளர். கழக சு.ராஜசேகர், மாவட்ட இ.அணி அமைப்பாளர். அறிவுச்சுடர். ப.கபிலன், ம.சங்கிலி, பிரவீண் குமார், கார்திக், பா.சேகர், பா.அருள், மொ.பெரியசாமி, தி.மு.க. குண்டு ரவி, டெல்லி ராஜா, ஜெய் கணேஷ், நந்த குமார், ஆறுமுகம், சுரேஷ், சுந்நர்ராஜ், திலக், கணேஷ், சோலை.முருகன், கம்யூனிஸ்ட் ஜெய்சங்கர், ஆல்வின், சவரியார், ச.அமலதாஸ், முத்தழகு, மேகராஜ், ஜெயபால், சுதர்சனம், மலர்க்கொடி கபிலன், மருதாம்பாள், சூந்தலா மற்றும் தோழர்கள் – பொது மக்கள்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 146ஆவது பிறந்த நாளன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியாருடைய சிலைக்கு மாவட்ட சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.குமாரதாஸ், மா ஆறுமுகம் ந. தமிழ் அரசன் கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் மாவட்ட திராவிடர்கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார தாஸ் பகுத்தறிவாளர்கழக செயலாளர் பெரியார்தாஸ், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை குமரி செல்வன், பா.சு. முத்துவைரவன், பி.கென்னடி, பொன் பாண்டியன், கூடங்குளம் பால கிருஷ்ணன், தும்பவிளை மு.பால்மணி நல்லூர் பெருமாள் பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்ததும், தோழர்கள் சமூகநீதி உறுதிமொழி எடுத்தனர். தோழர்களுக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் பொதுமக்களுக்கு உணவுப் பண்டங்களும், இனிப்புகள் பெரியாருடைய நூல்கள் வழங்கி உபசரித்தார். கழக மாவட்ட துணைத் தலைவர்தலைமையில் வடசேரி பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
செந்துறையில்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா சமூகநீதி உறுதிமொழி ஏற்புநாள் பெரியார் பட ஊர்வலம் அண்ணா நகரில் இருந்து கழக தோழர்கள் மற்றும் திமுக, தோழமைக் கட்சியினருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் செந்துறை முக்கிய கடைவீதி வழியாக பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அவரது ஏற்பாட்டில் கடந்த ஆண்டு திராவிடர் கழக தோழர்கள் மாவட்ட துணை செயலாளர் பொன்.செந்தில்குமாருக்கு பொலியோரோ மகிழ்ந்து வழங்கினார்.
தொடர்ந்து இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளில் திராவிட கழக தோழர்கள் ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் சேகர், இவர்களுடன் திமுக தோழர்கள் கோவிந்தசாமி, ரமேஷ், மோகன் உள்ளிட்ட 6 நபர்களுக்கு இருசக்கர வாகனத்தை தனித்தமிழ் கொட்றன், புலவர் அய்யம்பெருமள், செ.வெ.மாறன், கருப்புசாமி, செந்துறை ராஜேந்திரன், தங்க.சிவமூர்த்தி ஆகியோர் வழங்கினார்கள்
பின்னர் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பயன்பாட்டு பொருட்களான பெரியார் பிறந்த நாள் வாசகம் பொரிக்கப்பட்ட டிபன் பாக்ஸ் சர்க்கரை பொங்களுடன் திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி ஏற்பாட்டில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அறிவின், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மதியழகன், மாவட்ட விவசாய அணி தலைவர் சங்கர், மாவட்ட இணை செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட விவசாய சங்க பாதுகாப்பு தலைவர் பாலசிங்கம், தலித்.வெற்றி, தீரவளவன், நகரத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகள் நிகழ்வினை செம்மொழி குழுமம் செயலாளர் பொன்.செந்தில்குமார், நீதி செயலாளர் ஆசிரியர் வெங்கடேசன், துணைச் செயலாளர் கார்த்திக் ஒருங்கிணைத்தனர்.
துறையூரில்
துறையூரில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு டனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது.
காலை 10 மணிக்கு தப்பாட்டகலைஞர்கள் இசை முழங்க டாடா ஏசி வண்டியில் பெரியார் பாடல்கள் ஒலிக்க துறையூர் விநாயகர் தெரு ரமேஷ் நினைவு கொடிக் கம்பத்தில் கழகக் கொடி ஏற்றி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சமூக நீதி நாள் உறுதி மொழியை மாவட்ட தலைவர் ச. மணிவண்ணன் சொல்ல கழகத் தோழர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
காலை 10.15 மணிக்கு வடக்கு விநாயகர் தெரு வில் மாவட்ட ப.க.அமைப்பாளர் மு. தினேஷ் வீட்டின் அருகே பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
காலை 10.30 மணிக்கு சிலோன் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. காலை10.45 மணிக்கு பாலக்கரையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
முற்பகல் 11 மணிக்கு துறையூர் பேருந்து நிலையம் முன் கழகக் கொடி ஏற்றி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது. காலை 11.15 மணிக்கு துறையூர் நீதிமன்றம் முன் பெரியார் படத்திற்கு வழக்குரைஞர் பால்ராஜ் மாலை அணிவித்தார். காலை 11.30 மணிக்கு முசிறி பிரிவு சாலை சூர்யா பேட்டரி முன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. முற்பகல் 11.45 மணிக்கு புதிய வீட்டு வசதி வாரியம் முன் கழகக் கொடி ஏற்றி பெரியார் படத்திற்கு மாலைஅணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நண்பகல் 12 மணிக்கு காளிப்பட்டி யில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது
12.15 மணிக்கு காளிப்பட்டி கடைவீதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
1 மணிக்கு கண்ணனூர் சமத்துவ புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. உறுதி மொழி எடுக்கப்பட்டது.
மாலை 7 மணிக்கு துறையூர் விநாயகர் தெரு ரமேஷ் நினைவு கொடிக் கம்பம் அருகில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் உலகம் முன்பாக பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு சுவையான கோழி பிரியாணி சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
மிகுந்த மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி. மாநில ப. க. அமைப்பாளர் அ. சண்முகம் . மாவட்ட செயலாளர் ஜெ தினேஷ் பாபு, செ.செந்தில் குமார். மாவட்ட இளைஞரணி துணை தலைவர், நகர கழக அமைப்பாளர் ந.குணராஜன் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் தன்ராஜ். செயலாளர் சே. விஷ்ணு வர்தன்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.ரஞ்சித் குமார். மாவட்ட ப. க. துணை தலைவர் த. கலை பிரியன். நகர தலைவர் ராஜா. செயலாளர் இளையராஜா. மாணவர் கழகம் ம.இனியன் சம்பத்.
நகர ப. க. அமைப்பாளர் அ. தமிழ்ச்செல்வன் துணை அமைப்பாளர் கபில்தேவ். இளைஞரணி காவியா. சர்ஜுன். கோர்ட் எம். ஆர். சந்திர போஸ் நடராஜன் மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு. உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர் மாராடி எம் ஏ. ரமேஷ். செயலாளர் மாராடி சி. சத்திய சீலன். ஆர்டிஸ்ட் தி. க. பன்னீர். தமிழ்ப் புலிகள் மாவட்ட தலைவர் க.ராஜா. ஆட்டோ அழகு மலை.
சிங்களாந்தபுரம் பாரதி, மாலினி சண்முகம். பெரியார் பிஞ்சு மா. ச. டார்வின் பெரியார் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துறையூர் கழக மாவட்டத்தில் அபினிமங்கலம். புலிவலம்.முசிறி.தொட்டியம்.மாராடி.உப்பிலியபுரம்.நாகநல்லூர் என பல ஊர்களில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தென்சென்னையில்…
17.09.2024 நண்பகல் 12.00 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழித்திரை வைக்கப்பட்டு, அதன் அருகே தந்தை பெரியாரின் படம் அலங்கரித்து வைத்து மாலை அணிவிக்கப்பட்டது.
பகுதி கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இர.வில்வநாதன் தலைமையில், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையில் 100 பேருக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் கோ.வீ.ராகவன், தொழிலாளர் அணி தலைவர் ச.மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, தரமணி ம.ராஜி, பெரியார் ஆதவன் மற்றும் இன்பக் கதிர் ஆகியோர் பங்கேற்றனர்.
செந்துறை
செந்துறையில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி வழங்கினார். (17.9.2024)
மத்து மடக்கி கிராமத்தில்…
சேலம் பொன்னமாப்பேட்டை பகுதியில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பா.வைரம் தலைமையில் கழகத் தோழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, முழக்கமிட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கி கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற 50 தோழர்களுக்கும் வைரம் மதிய உணவாக இறைச்சி உணவு வழங்கினார்.
கிருட்டினகிரியில்…
கிருட்டினகிரி, செப்.8- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு கிருட்டினகிரி மாவட்ட தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், ஒன்றியத் தலைவர் த.மாது, நகர செயலாளர் அ.கோ. இராசா, நகரத் தலைவர் கோ.தங்கராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ப.க. தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் மா.சிவசங்கர், பகுத்தறிவாளர் கழக நிர்வாகி பொறியாளர் கு.முத்துசாமி, தி.மு.க. கலை இலக்கிய அணி மோகன், மதிமுக சந்திரன், நித்தியானந்தபாபு, குப்புசாமி, சிபிஅய்.(எம்) நாகராஜ், விசிக மேனாள் ஒன்றிய செயலாளர் அருண், மக்கள் அதிகாரம் அருண், திராவிடர் கழக மாவட்ட விவசாய அணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி, துணைச் செயலாளர் பூ.இராசேந்திரபாபு, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பன்னியாண்டி சமூக நல சங்க மாவட்டச் செயலாளர் தாமோதரன், கல்லூரி மாணவர் கழக தோழர்கள் கி.வீரமணி, நா.சிந்துமதி, பெரியார் பிஞ்சுகள் செ.வீரபாண்டி, மா.அன்புச்செல்வன், மா.அறிவுச்செல்வன் மற்றும் திராவிடர் கழக, திமுக.,விசிக., மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பார்களும் தோழர்களும் திரளாக கலந்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் பிறந்தநாளில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் தந்தை பெரியார் மய்ய கூட்டரங்கில் வைக்க பகுத்தறிவாளர் கழக நிர்வாகி பொறியாளர் கு.முத்துசாமி அவர்கள் புரட்சியாளர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் படத்தினை மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள்.
காவேரிப்பட்டணம் காந்தி நகரில்…
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் காந்தி நகரில் தந்தை பெரியார் 146 -ஆம் ஆண்டு பிறந்தநாளான செப்:17அன்று சமூகநீதி நாள் – டிஜிட்டல் பேனரில் பெரியார் படம் மற்றும் “உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுளே தேவையில்லை” என்ற வாசகமும் குடிஅரசு நாளிதழ் படம் இணைந்த டிஜிட்டல் பேனர் வைத்து தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – சமூகநீதி நாள் டிஜிட்டல் பேனரை காந்தி நகரை சேர்ந்த இயக்கத்திற்கு அறிமுகம் இல்லாத ஆ.மதியரசு, ஆ.கவியரசு, சி.சில்வநாணேஷ், ச.திலீப்குமார்,
சவு.சக்திவேல், க.முத்துசெல்வன் ஆகிய ஆறு இளைஞர்கள் ஏற்பாட்டில் புரட்சிகரமான டிஜிட்டல் பேனரை வடிவமைத்து காந்தி நகரில் “தந்தை பெரியார்” பிறந்தநாள் சமூகநீதி நாள் என வைத்துள்ளதை அறிந்த அதேப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் அவர்கள் மதியம் 12.15 மணியளவில் மாவட்ட கழக துணைச்செயலாளர் சி.சீனிவாசனுக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு இப்பகுதி இளைஞர்கள் ஒரு பேனர் வைத்துள்ளனர். ஆகையால் தாங்கள் நேரில் வந்து செல்லுங்கள் என தெரிவித்தார். உடனே மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது ஆகியோருடன் காந்தி நகர் சென்று மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இளைஞர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தும், தந்தை பெரியார் பிறந்தநாள்-சமூகநீதி நாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம். இளைஞர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பெரியார் பிறந்தநாள் விழாைவை கொண்டாடி மகிழ்ந்தனர்.