ஸ்டாக்ஹோம்,அக்.10 2024ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7.10.2024 அன்று முதல் வௌியாகி வருகிறது.
7.10.2024 அன்று அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 8.10.2024 அன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு இயற்பி யலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான வேதியிய லுக்கான நோபல் பரிசு நேற்று (9.10.2024) வௌியானது. அமெரிக் காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவகையான புரதத்தை கண்டறிந்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுகிறது. ஏ.அய். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புரதங்களின் கட்டமைப்பை கண்டறியும் வழியை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தங்க பதக்கத்துடன் கூடிய ரூ.8.39 கோடி பரிசு தொகையை உள்ளடக்கிய நோபல் விருதுகள் விருதை நிறுவிய ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.