தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். ‘தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க’ என்ற முழக்கத்துக்கிடையில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நன்றி தெரிவித்துக் கொண்ட தமிழர் தலைவர், “இவ்விருது பற்றிய குறிப்பிலேயே 60 ஆண்டுகள் ‘விடுதலை’ ஆசிரியராக பணியாற்றியது பற்றியும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கிறது. அது தனி மனிதனாக என்னுடைய சாதனையல்ல. எனவே இவ்விருது உங்கள் அனைவருக்கும் உரியது தான்” என்று தெரிவித்தார். அப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மேலாளர் ப. சீதாராமன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், அச்சகப் பிரிவு மேலாளர் க. சரவணன், திராவிடன் நிதி நிறுவன மேலாளர் து. அருள்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர். (பெரியார் திடல் – 1.8.2023)