1984 தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களான சர் ஜான் மார்ஷல் எர்னஸ்ட் மேக் மற்றும் ஹரோல்ட் ஹக்யூஸ் ஆகியோர் இணைந்து சிந்து நதியின் படுகைகளில் ஹரப்பா என்கிற பகுதியில்,, ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் வெண்கல காலத்தின் புதையுண்ட நகரம் ஒன்றை.. அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்ததன் மூல வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது தான் சிந்துவெளி நாகரிகம். மொகஞ்சதாரோ.. தோலாவீரா போன்றவற்றையும் உள்ளடக்கிய.. பிரம்மாண்டமாக உலகை உலுக்கிய வரலாற்று திருப்புமுனை என்று இது கருதப்படுகிறது.
மறைந்த ஆர்.டி. பானர்ஜி, எம். எஸ். வாட்ஸ், கே.என்.தீக்ஷித் போன்ற இந்தியர்கள் மட்டுமின்றி ஜான் மார்ஷல் அலெக்சாண்டர் கன்னின்கம் போன்ற தொல்லியல் அறிஞர்களும் அந்த நாகரிகம் திராவிட நாகரிகத்தோடு தொடர்புடையது என்பதை நிரூபித்து பஞ்சாப் என்கின்ற அந்த மாகாணத்தின் சிந்துவின் துணை நதியான ராவி நதியின் பள்ளத்தாக்கில் ஒரு பிரமாண்ட நாகரிக பெருநகரமான ஹரப்பா என்கிற பகுதியை முன்வைத்து ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்த அகழ்வாராய்ச்சி நிலத்தின் பெரும் பகுதிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.
சிந்து சமவெளி நாகரிகத்தை ஆய்வு செய்பவர்கள் அய்ந்து முக்கிய நகர்ப்புற தலங்களை எப்போதும் குறிப்பிடுகிறார்கள் ஹரப்பா மொகஞ்சதாரோ. தோலாவீரா, கண்ணேரிவாளா மற்றும் ராகிகர்கி என்பவை அவை. இதை தவிர அந்த பகுதியில் 616 சிறு சிறு தலங்கள் பதிவாகியுள்ளன. உலகெங்கிலும் இருந்து வந்து இந்த பகுதிகளை ஆய்வு செய்பவர்கள், இன்றும் அதை திறந்தவெளி ஆய்வுக்கூடமாக கருதுகின்றனர். யுனெஸ்கோவின் பெரும் முயற்சியின் காரணமாக எவ்விதமான காழ்ப்புணர்ச்சியும் இன்றி வரலாறை தெளிவாக மறுவாசிப்பு செய்து இது திராவிட நாகரிகம் என்று அறிவித்தனர். ஆரம்பகால ஹரப்பா முதிர்ந்த ஹரப்பா பிற்கால ஹரப்பா என்று இந்த வரலாறு தெளிவாக பிரித்து உணரப்பட்டது.
புள்ளியியல் அறிவியலின் மரபு சார்ந்து எஹ்சாஸ் வேட்டைக்காரர்கள் மற்றும் ஈரானிய கற்கால விவசாயிகள் என்ற மரபிலிருந்து இந்த நாகரிகம் வந்தது என தெளிவாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று ஆட்சி பொறுப்பில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். கூடாரத்தின் போலி கூட்டணி மோடி அரசு, இந்த வரலாற்றை திரிப்பதற்கு பலவகைகளில் சதி செய்கிறது. வேண்டுமென்றே வரலாற்றில் ஒருபோதும் நிரூபிக்கப்படாத சரஸ்வதி நதி என்கிற ஒரு நதி இந்தப்பகுதியில் ஓடியதாகவும் அதற்கு அகழ்வாராய்ச்சியில் தரவுகள் கிடைத்திருப்பதாகவும் கேலிக்கூத்தாக வல்லுநர்கள் என்று அழைக்கப்படும் போலி வரலாற்றாளர்களால் காவி சாயத்தை பூச நினைக்கிறது. இதுதான் உண்மையான ஆரிய நாகரிகம் என்று பாடப் புத்தகங்களில் குறிப்பிட சதி செய்கிறது.
ஆரிய, வேத நாகரிகம் என்று சிந்துவெளி நாகரிகத்தை திணிப்பதற்காகவே வரலாற்றை ஆய்வு செய்யும் ஒரு குழுவை அது நியமித்துள்ளது. 17 பேர் கொண்ட இந்த குழுவில் 14 பேர் ஆர். எஸ். எஸ். ஸைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஆவார்கள். வரலாற்று திரிபுவாதம் மிக மிக மோசமானதாகும்.
திராவிட நாகரிகம் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த நூறாவது ஆண்டில்.. வரலாற்று திரிபுவாதத்தை எதிர்ப்போம் உண்மையான வரலாறை கொண்ட இந்தியாவின் இதயத் துடிப்பை பன்முகத்தன்மை ஒன்றிணைந்து தக்க வைப்போம்.
நன்றி:‘புதிய புத்தகம் பேசுது’ – தலையங்கம் – அக்டோபர் 2024