ஆண்டிப்பட்டியில் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளில் கொள்கை திருவிழா…
ஆண்டிப்பட்டி, அக். 8- உலக பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளில் ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக 23ஆம் ஆண்டாக மாபெரும் குருதிக்கொடை முகாம் 29.9.2024 அன்று ஆவுடையாச்சி மண்டபத்தில் ஆண்டிபட்டி பேரூர் மன்ற தலைவர் பொன் .சந்தனகலா தலைமையில் நடைபெற்றது
ச. ரகுநாகநாதன் மாவட்ட கழக காப்பாளர் போடி, ம. சுருளிராசு தி.க மாவட்டத் தலைவர் போடி, பு.பேபி சாந்தாதேவி, கழக பொதுக்குழு உறுப்பினர் போடி, அ. மன்னர் மன்னன், கழக பொதுக்குழு உறுப் பினர் உசிலம்பட்டி, மு.அழகர்ராஜா நகர் தலைவர், இரா. ஆண்டிச்சாமி நகர் செயலாளர் முன்னிலை வகித் தனர்.
முகாம் துவக்கி வைத்தவர்:
பெ.சர்ச்சில் துரை பசுமை தேனி, உலக அமைதி குழு
முதல் குருதிக்கொடை வழங்கி துவக்கி வைத்தவர்கள் ஸ்டார்.சா.நாகராசன் கழக தேனி மாவட்ட துணைத் தலைவர்
ஸ்டார்.நா.ஜீவா மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் நா.விஜயன் ஜமீன்தார் தேனி,
ஆ.தனுஷ், கா.ம. அரி விசுவநாத், வாழ்த் துரை… ஆ. ராமசாமி தி.மு.க பெருந்தொண்டர், நெசவாளர் அணி, மா. பால்பாண்டியன் இயக்குனர் மனிதநேய காப்பகம், உலக அமைதி குழு தேனி. உறுதிக் கொடை முகாமில் மொத்தம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் தகுதி உடைய ஆரோக் கியமுள்ளவர்கள் 85 நபர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள்.
இதில் 10 பெண்கள் குருதியை சேகரித்து தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனை குருதி வங்கிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
மருத்துவர்கள், கணவன் மனைவியாக, அப்பா மகன், தாத்தா பேரன், கூலித் தொழிலாளிகள் முடி திருத்தும் தொழிலாளிகள், சலவை தொழிலாளிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள், உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளிகள் என்று சமூக ஆர்வலர்கள் சாரசாரையாக வந்து குருதிக்கொடை வழங்கி உயிர் நேயர்கள் என்பதை நிரூபிக்கும் சிறப்பு தேனி மாவட்டத்தில் முதன் மையான குறுதிக்கொடை அமைப்பு.
ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதி கொடை கழகம், ஆண்டிபட்டி நோபிள் டோனர்ஸ் கிளப் மற்றும் இந்த ஆண்டு ஆண்டிபட்டி ரோட்டரி கிளப் இணைந்தது.
குருதிக்கொடை வழங்கிய அனைவருக்கும் ஸ்டார் இனிப்ப கம் ஸ்டார் அறக்கட்டளை சார் பாக பேரிச்சம்பழம் பிஸ்கட் வழங் கப்பட்டது.