8.10.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அக்டோபர் மாதம் முதல் 2025 மார்ச் வரை ரூ.5,000 ஊக்க தொகை வழங்கவும் பணியின் போது உயிர் இழந்தால் சம்பந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
நீட் தேர்வு: வினாத்தாள் திருட்டு தொடர்பாக பாட்னாவில் கைது செய்யப்பட்ட 21 பேர் மீது சி.பி.அய். மூன்றாவது குற்றப் பத்திரிக்கையையும் பதிவு செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஜாதி எண்ணிக்கையை உள்ளடக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பை பிரதமர் மோடி ஏன் தாமதப்படுத்துகிறார்: காங்கிரஸ் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை மறுஆய்வு செய்ய கருநாடக அரசு குழு அமைக்க வாய்ப்பு.
தி டெலிகிராப்:
மோடி அரசால் ஓபிசி பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து 2017இல் அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளது ஏன்?
– குடந்தை கருணா