காரைக்குடி, அக்.8- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி அமைப்பாளர் தோழர் இளங்குடி இள.நதியா அவர்களின் இணையர் கரு.இளங்கோவன் (வயது 50) அவர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது!
ஈடு செய்ய முடியாத இளவயது மரணம் இது. தோழர் இள.நதியா அவர்களிடமும், குடும்பத்தாரிடமும் கழகத் தோழர்கள் ஆறுதல் தெரிவித் தனர். (08.10.2024)
நிகழ்வில் மாவட்டக் காப்பாளர் சாமி. திராவிடமணி, மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி மாவட்டத் துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், காரைக்குடி மாநகரத் தலைவர் ந.ஜெகதீசன் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா காரைக் குடி மாநகரச் செயலாளர் அ.பிரவீன் முத்துவேல், காரைக்குடி மாநகரத் துணைத் தலைவர் அ.பழனிவேல் ராசன் பகுத்தறிவாளார் கழக மாவட்டத் தலைவர் சு.முழுமதி, பகுத்தறிவாளார் கழக மாவட்ட அமைப்பாளர் துரை. செல்வம் முடியரசன், கல்லல் ஒன்றியச் செயலாளர் கொரட்டி வீ.பாலு, பெரியார் பெருந்தொண்டர் கைவல்யம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இளங்குடி கரு.இளங்கோவன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

Leave a Comment