சென்னை, அக்.8 வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மேயா் பிரியா பேசிய தாவது, சென்னையில் சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 169 நிவாரண மய்யங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், நிவாரணப் பொருள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றுவது, சுரங்கபாதைகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும்.
மழைக்காலங்களில் பொதுமக்களிட மிருந்து மழை பாதிப்பு தொடா்பாக வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மழை தொடா்பான புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில் மாநகராட்சியின் 1913 எனும் உதவி எண், தற்போது 150 கூடுதல் இணைப்புகளுடன் இணைக் கப்பட்டுள்ளது. மேலும், 9445551913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார்கள் மற்றும் தகவல் களை தெரிவிக்கலாம் என்றார் அவா்.
கலைஞர் விருது
30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.8 கலைஞர் விருதுக்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் அடியொற்றித் தாய்த்தமிழுக்குத் தொண்டாற்றும் அறிஞர் ஒருவருக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் விருது‘ என்ற புதிய விருது தோற்றுவிக்கப்பட்டு, விருதுத்தொகையாக ரூ.10 லட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம் ஆகியன வழங்கிச் சிறப்பிக்கப்பெறும் என மானியக் கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2025ஆம் ஆண்டு 2ஆம் நாளான திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படும் திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகிய விருதுகளோடு புதிய விருதான முத்தமிழறிஞர் கலைஞர் விருதையும் இணைந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
www.tamilvalarchi thurai. tn.gov.in/awards என்ற http://awards.tn.gov.in இணைய தளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை நிறைவு செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக வரும் 30ஆம் தேதிக்குள் தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் சூரியசக்தி மின்சார பூங்கா மின்வாரியம் அமைக்கிறது
சென்னை, அக்.8 தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கும் மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது வரை 8,180 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தனியார் நிறுவனங்களே அமைத்துள்ளன.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் தவிர்த்து மாவட்டம் தோறும் தலா 50 முதல் 100 மெகாவாட் என மொத்தம் 4 ஆயிரம் மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்க கடந்த 2021-2022-இல் மின்வாரியம் திட்டமிட்டது. இதற்காக, மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, திருவாரூர், கரூர், நாகை, சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3,300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. முதல் பூங்காவாக திருவாரூரில் 50 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்சார நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இப் பணிகளை மேற்கொள்ள ‘தமிழக பசுமை எரிசக்தி கழகம்’ என்ற புதிய நிறுவனம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட் டது.இந்நிறுவனம் மூலம், மேற்கண்ட 6 மாவட்டங்க ளிலும் சூரியசக்தி மின்சார பூங்காஅமைக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.