தேவிபட்டினம் அருகே பெருவயல் கோயிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு

2 Min Read

ராமேசுவரம், அக்.8 தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழைமையான பாண்டியர் கால கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே பெருவயல், கோயில் கட்டயத் தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1728-1735) மன்னரின் (பிரதானி) வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. அவருக்கு பின் கி.பி.1736-இல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலை யனூர் எனும் கிராமத்தை கோயிலுக்கு கொடையாகக் கொடுத்த கல்வெட்டு இந்த கோயிலில் உள்ளது.

இந்நிலையில் இந்த கோயிலில் 800 ஆண்டுகள் பழைமையான பாண்டிய மன்னர் கல்வெட்டை ராம நாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டெடுத்து படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

புதிதாக கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டு, கோயில் திருச்சுற்று வடமேற்குமூலையில் உள்ள தூண் போதிகையில் உள்ளது. இதில் “(சந்தி) விக்கிரகப் பேறும் மற்றும் எப் பேர்பட்டின(வும்), ரன்னொம் கைக்கொண்டு திருப்படி மாற்றுள்(ளிட்டு), செம்பிலும் வெட்டிக்கொள்க, இவை மதுரோதய வளநாட்டுக் காஞை (இருக்கை), பெருமணலூர் மந்திரி ப(ல்லவ ராயன்)” என உள்ளது.

கல்வெட்டில் சொல்லப் படும் பெருமணலூர் மந்திரி பல்லவராயன் என்பவர், முதலாம் மாற வர்ம சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியாவார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, திருத் தங்கல், ஈஞ்சார் கோயில் கல்வெட்டுகளில் இவரது பெயர் குறிப்பிடப்படுகிறது.

இந்த கல்வெட்டு 800 ஆண்டுகள் பழைமையான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244)காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் காலத்தில் இந்த கோயிலுக்கு கொடை வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சந்தி விக்கிரகப்பேறு என்ற வரியும், மதுரோதய வளநாட்டுக் காஞை இருக்கை என்ற நாட்டுப் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூணின் மேல்பகுதியை உத்திரத்துடன் இணைக்கும் விரிந்த கை போன்ற அமைப்பை போதிகை என்பர். பாண்டியர், நாயக்கர், சேதுபதி மன்னர் காலங்களில் கட்டப்பட்ட கோயில் தூண் களில் வெவ்வேறு வகையான போதிகைகளை அமைத்து அழகுபடுத்துவர்.

கல்வெட்டு உள்ள வெட்டுப் போதிகை எனும் அமைப்பு பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். பாண்டியர் கால வெட்டுப் போதிகைகளை சேதுபதிகால கருங்கல் தூண்களுடன் இணைத்து இக்கோயில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
வெட்டுப் போதிகை கற்கள் இவ்வூரில் இருந்து அழிந்து போன ஒரு பாண் டியர் காலத்தில் சமணக் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *