புதுடில்லி, ஆக.3 காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-ஆவது கூட்டம் வருகிற வரும் 11ஆ-ம் தேதி டில்லியில் நடைபெறும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.
கருநாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முடிவெடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-ஆவது கூட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. டில்லியில் உள்ள ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
4 மாநிலங்களுக்கு அழைப்பு: இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கருநாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த நீர் வளத்துறை செயலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூலை வரை பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளி யேற்றம் மற்றும் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. கருநாடக அரசின் தரப்பில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்த இருப்பதாகவும் தெரிகிறது.