சென்னை, அக்.7- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்துாரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்த கைக்கு வழங்குவது தொடர்பாக பிறப்பித்த அறிவிப் பாணையில் தலையிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க, கொளத்துாரில் உள்ள சோமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை, 25 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்க, கடந்த மாதம் அறநிலையத்துறை ஆணையர் அறிவிப்பாணை பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, சோமநாதசாமி கோவிலில் டி.ஆர்.ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியதாவது:
கோவில் நிலம் குத்தகை தொடர்பாக, அற நிலையத்துறை சட்டத்தில் கூறிய அம்சங்கள் பின்பற்றப்படவில்லை. வருவாய் துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, அறிவிப்பாணை பிறப்பிக்கப்படவில்லை.
கோவில் நிதியில் கல்லூரிகள் துவங்குவதை எதிர்த்த வழக்கில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட் டுள்ளன. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி கூறியதாவது:
குத்தகையின் போது, உரிய நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படும். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணை தொடர்பாக, மனுதாரரோ அல்லது பாதிக்கப்படுவதாக கூறப் படுவோரோ, தங்கள் ஆட்சேபனை மற்றும் பரிந்துரைகளை, வரும் 9ஆம் தேதிக்கு முன், ஆணையரிடம் அளிக்கலாம். அதை செய்வதற்கு பதில், நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:
கல்லூரி துவங்கும் நல்ல நோக்கத்துக்காக, கோவில் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக, இந்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை விலகல், முறைகேடுகள் எதையும் சுட்டிக்காட்ட மனுதாரர் நினைத்தால், எழுத்துப் பூர்வமாக அறநிலையத்துறை ஆணையரிடம் வழங் கலாம். தற்போதைய கட்டத்தில், அறிவிப்பாணையில் குறுக்கிட விரும்பவில்லை.
எனவே, வரும் 9ஆம் தேதிக்கு முன், அறநிலையத்துறை ஆணையரிடம், எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை வழங்க, மனுதாரருக்கு உத்தர விடப்படுகிறது. தகுதி, அரசாணை, சட்டப்படி, அதை ஆணையர் பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மகப்பேறு பெண்களுக்கு
தனி இணைய தளம்!
தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, அக்.7- மகப்பேறு காலத்தில் ஆரோக்கியத்தை பாது காப்பது எப்படி என்பது குறித்த தனி இணையதளத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மகப்பேறு காலத்தில்…
மகப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு முக்கியமான காலகட்டமாகும். பெண் கருத்தரிப்பில் தொடங்கி கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு, குழந்தை பிறந்து 6 மாதம் வரை என இந்த நேரத்தில் ஒரு பெண் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏராளமான பரிசோதனைகள், ஸ்கேன்கள் எடுக்கப் படுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் ஆரோக் கியத்திற்காக வைட்டமின், கால்சியம் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இது மட்டும் ஒரு ஆரோக்கியமான மகப்பேறு காலத்திற்கு போதாது.
மகப்பேறு பெண்களுக்கு தேவையான அறிவுரைகளையும் சரியான நேரத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு தாய்தான் தனது குழந்தைக்கு முதல் மருத்துவர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மகப்பேறு காலத்தில் ஒரு தாய் தன்னையும், தன் குழந்தையையும் ஆரோக்கிய மான முறையில் பாதுகாப்பது எப்படி? என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந் தவகையில் மகப்பேறு காலத்தில் தாய்மார்களுக்கு தேவையான தகவல்கள் அடங்கிய ‘www.iogkgh.org.in’ இணையதளத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
உடற்பயிற்சி-யோகா
இந்த இணையதளத்தை பார்க்கஒருகியூ.ஆர்.கோடை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் தேரணி ராஜன் மற்றும் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் குப்புலட்சுமி ஆகியோர் 5.10.2024 அன்று வெளியிட்டனர். இணையத ளத்தில் மகப்பேறு காலத்தில் தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் குழந்தை பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு, கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம், குருதிசோகை பிரச்சினைகள் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் உடற்பயிற்சி, யோகா செய்வதன் பயன்குறித்த ஒளிப்படம், காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.