நம் சுற்றுச்சூழலில் காற்று, மண், அழுகும் தாவரங்கள், நம் உடலின் தோல், குடல் என, எல்லா இடங் களிலும் பூஞ்சைகள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பூஞ்சைகள் போலவே, தீமை செய்பவையும் உள்ளன. இவற்றால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இறக்கின்றனர்.
சமீப காலமாக, ஆப்ரிக்காவில் பூஞ்சைகளால் உருவாகும் நோய் கள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் களையே பூஞ்சைகள் அதிகம் தாக்குகின்றன.
37 டிகிரி செல்சியஸ் கொண்ட மனித உடலின் வெப்பநிலையில், பெரும்பாலான பூஞ்சைகளால் வாழ இயலாது. ஆனால், மாறிவரும் பருவச் சூழலால், அதிகமான வெப்ப நிலையிலும் கூட வாழ் வதற்கு, பூஞ்சைகள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளன.
‘க்ரிப்டோகாக்கஸ் நியோ ஃபோர்மன்ஸ்’ எனும் பூஞ்சையால் ஏற்படும், ‘க்ரிப்டோகாக்கல் மெனிங் கிடிஸ்’ என்ற நோய், முதலில் நுரை யீரலில் வளர்ந்து, பின்னர் மூளை யைத் தாக்குகிறது. ‘நியுமோசிஸ்டிஸ் ஜிரோவெசி நிமோனியா’ என்ற நோய் ‘நியுமோசிஸ்டிஸ் ஜிரோ வெசி’ எனும் பூஞ்சையால் ஏற்படு கிறது. இவை இரண்டும் எச்.அய்.வி.,யால் பாதிக்கப்பட்டவர் களைத் தாக்குகின்றன.
இந்த நோய்களுக்கான மருந்து களைக் கண்டறியும் முறைகளுக்கு செலவு அதிகம் என்பதால் இவற்றைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இவற்றுக்கான தீர்வை விஞ்ஞானிகள் முழு வீச்சில் தேடி வருகின்றனர்.