குழந்தைகளாக இருக்கும் போது பால்பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் வளரும். நிரந்தரப் பற்கள் விழுந்து விட்டாலோ, அவை திரும்ப முளைப்பதில்லை. ஆனால், சுறாக்களுக்குச் சில வாரங்களுக்கு ஒருமுறை, புதிய பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். முதலை களுக்கும் அவற்றின் வாழ்நாள் முழுதும் ஆயிரக்கணக்கான பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்.
இவற்றை அடிப்படையாக கொண்டு, விழுந்த பற்களைத் திரும்ப வளர வைக்கும் வழி முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
‘போன் மார்ஃபோஜெனிக் புரோட்டீன்’ எனும் ஒரு வகை புரதத்தைத் தூண்டுவதன் வாயி லாக, பல் வளர்ச்சியை உருவாக் கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து, 2024ஆம் ஆண்டில் ‘டூத் ஏஜனிசிஸ்’ எனும் மரபணு குறைபாட்டினால் ஏற்படும் பல் வளர்ச்சி யின்மையால் அவதிப் படுவோ ரிடம் சோதனை நடத்த உள்ளனர்.
தற்போது இது குறித்து ஆராய்ந்து வரும் ஜப்பான் நாட்டின் ஒசாகா மருத்துவ ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தப் புதிய சிகிச்சை முறை 2030ஆம் ஆண்டிற்குள் முழு வடிவம் பெறும் என்கின்றனர்.