புதுடில்லி, அக். 6- டில்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக் குழு தேர்தல் தொடர்பாக டில்லி துணை நிலை ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித் துள்ளது.
டில்லி மாநகராட்சியில் அதி காரம் படைத்த அமைப்பாக உள்ளாட்சி நிலைக்குழு உள் ளது. இந்த குழுவில் 18 உறுப் பினர்கள் உள்ளனர். இதில் இடம் பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த கமல்ஜித் ஷெராவத் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டு உள்ளார். இந்த காலி யிடத்துக்கு பாஜக கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வாரும், ஆம் ஆத்மி கவுன்சிலர் நிர்மலா குமாரியும் போட்டியிட்டனர்.
டில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மிக்கு 125 கவுன்சிலர்களும் காங்கிரஸுக்கு 9 கவுன்சிலர்களும் உள்ளனர். பாஜகவுக்கு 115 கவுன் சிலர்கள் உள்ளனர். உள்ளாட்சி நிலைக்குழு உறுப்பினருக்கான தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் என்று மேயர் ஷெல்லி ஓபராய் அறிவித்திருந்தார்.
ஆனால், துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவின் உத்தரவின்படி கடந்த 27ஆம் தேதி இரவில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலை ஆம் ஆத்மியும் காங்கிரஸும் புறக்கணித்தன. பாஜக கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வாருக்கு 115 வாக்குகள் கிடைத் தன. அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மேயர் ஷெல்லி ஓபராய் உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நரசிம்ஹா, மகாதேவன் அமர்வு முன்பு நேற்று (4.10.2024) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
டில்லி துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகளில் துணை நிலை ஆளுநர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன் படுத்தக்கூடாது.
முன்கூட்டியே தேர்தலை நடத்த உத்தரவிட்டது ஏன்? துணைநிலை ஆளுநர் இதுபோல தொடர்ந்து தலையீடு செய்தால் ஜனநாயகத்தின் நிலை என்ன வாகும்? இந்த விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர், தேர்தலை நடத்திய அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
டில்லி மாநகராட்சி உள் ளாட்சி நிலைக்குழு தலைவர் தேர்தலை இப்போதைக்கு நடத் தக் கூடாது. வழக்கின்அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.