துணைக் கூட்டாளர் விருது – ஹனிவெல் மற்றும் ஆட்டோகேட் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது!
வல்லம், அக்.6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மதுரை மாரியட் ஹோட்டல் அய்சிடி அகாடாமியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது பெருமையுடன் மூன்று மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றது.
இந்த அமைப்பு TNEGOV வழங்கும் துணைக் கூட்டாளர் விருதையும், ஹனிவெல் மற்றும் ஆட்டோகேட் ஆகிய இரண்டிலி ருந்தும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதுகளையும் பெற்றுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய வல்லம், தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தை பாராட்டி தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சிறீ வித்யா, கணினி அறிவியல் பயன் பாட்டியியல் துறைத்தலைவர் பேராசிரியர் எம்.சர்மிளாபேகம், இயந்திரவியல் துறை பேராசிரியர் தலைவர் பேராசிரியர் ஏ.புகழேந்தி மற்றும் உதவிப் பேராசிரியர் எஸ்.பி.ரம்யா, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.இளங்கோவன் ஆகியோர் இவ்விருதினை பெற்றுக் கொண்டனர்.
மேலும் கல்வி மற்றும் தொழில் துறைகளில் புத்தாக்கம், இவ்விருது வழங்குவதற்கான ஒத்துழைப்பை பெற்றுத் தந்தனர்.
இவ்விருது (அய்.சி.டி அகாடமி) பெறுவதற்கான உறுதுணையாக இருந்த பல்கலைக்கழக பதி வாளர், துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், பங்குதாரர் ஆகியோர்களுக்கு அய்.சி.டி.அகாடமி தமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.