உத்தரப் பிரதேசத்தில் சாமியாரின் காட்டாட்சி!

Viduthalai
2 Min Read

பாலியல் வன்கொடுமை புகார் செய்த தாழ்த்தப்பட்ட சமூக ஆசிரியரின் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த உயர்ஜாதியினர்

அமேதி, அக்.6- அமேதியில், ஆசிரியர் மற்றும் அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வில், ஆசிரியரின் மனைவி, கடந்த மாதம் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் காவல்துறை விசாரணையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
எனக்கோ, எனது குடும்பத்தில் யாருக்கோ எந்த ஆபத்து நேரிட்டா லும் அதற்கு சந்தர் வர்மாதான் காரணம் என கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் சுனில் குமாரின் மனைவி பூனம் பாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப் பது தற்போது வெளிச் சத்துக்கு வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், 3.10.2024 அன்று மாலை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இவர்களது உடல்களுக்கு நடத்தப் பட்ட உடல் கூராய்வில், ஆசிரியரை மூன்று முறையும், மனைவியை இரண்டு முறையும் 5 வயது மகள் மற்றும் 18 மாதக் கைக்குழந்தையை தலா ஒரு முறையும் சுடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இந்த நிலையில்தான், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் பூனம் பாரதி புகார் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த புகாரில், சந்தன் வர்மா தன்னை தாக்கி, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரில் குறிப்பிட்டிருக்கும் சந்தன் வர்மா, ரே பரேலியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைக்காக ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு சந்தன் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதனைத் தட்டிக்கேட்ட தன்னையும் கணவரையும் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய தாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், சந்தன் தன்னை துன்புறுத்தி, மிரட்டியிருப்பதாகவும், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருப்பதா கவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து தன்னையும் தன் குடும் பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பூனம் வலியுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினரையுமே துப்பாக்கியால் சுட்டுகொலை செய்துள்ளனர்.

இந்த கொலை விவகாரத்தில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை குற்றவாளி குறித்து ஆசிரியர் ஏற்கெனவே புகார் கொடுத்த நிலையில் காவல் துறை யினர் கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கூறி விசாரணையை கிடப்பில் போட முயற்சிக்கின்றன என்று கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் குடும்பத் தினர் போராட்டம் நடத்தினர்.
கடந்த 8 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தற்போது கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்பதே இந்தக்கொலை மூலம் தெரியவந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *