சென்னை, அக்.6- தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிர மடையவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. ஆண்டுதோறும் வழக்கமாக வேளாண் பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்தது. வட மாநிலங்களில் ஜூலை மாதம்தான் பருவக்காற்று பரவி மழையை கொடுக்கத் தொடங்கியது. டில்லி, மும்பை, அசாம், நேபாளம், குஜராத் மாநில பகுதிகள் வெள் ளத்தில் மிதந்தன. கருநாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகனமழை கொட்டி தீர்த்தது.
ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் சென்றது. மேட்டூர் அணை நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்தாலும் ஜூன் 1 முதல் செப்.30ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலமாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் வரையறை செய்துள்ளது. இந்த ஆண்டு இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை.
தேசியஅளவில் மேற்கூறிய 4 மாதங்களில் தென் மாநிலங்களில் வழக்கத்தைவிட 14 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது. இந் நிலையில், அடுத்த 15 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தற்போதைய நிலவரப்படி, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிர தேசம், உத்தராகண்ட், ராஜஸ் தான் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை விலகியுள்ளது.
குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் பருவமழை விலகியுள் ளது. அடுத்த 2 நாட்களுக்குள் முழுமையாக விலக வாய்ப்புள்ளது.
இதர மாநிலங்களில் அக்டோபர் 2ஆவது வாரத்துக்குள் தென்மேற்கு பருவ மழை முழுமையாக விலகக் கூடும். அதனைத் தொடர்ந்து அக்.1 5ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்கவாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் இன்று மழை: இதற்கிடையே, ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலகீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் (6.10.2024) வரும் 11ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மேற்கூறிய மாவட்டங்கள் (தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் நீங்கலாக) மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். வரும் 8ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 9ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக் கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 10ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருது நகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.