நேற்று (05.10.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை அடையாறு நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எஸ்.அசன் மவுலானா, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெயசந்திர பானு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையாளர் எம்.விஜயலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி, நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், மாநகர நல அலுவலர் மருத்துவர்
எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.பானுமதி, மாமன்ற உறுப்பினர்கள் து.சுபாஷினி, தா.மோகன்குமார், ம.ராதிகா, க.விசாலாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை அடையாறு நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி

Leave a Comment