மயிலாடுதுறை, அக். 6- தாழ்த்தப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயா்த்த வேண்டும் என்று மயிலாடுதுறையில் நடை பெற்ற கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உள் இடஒதுக்கீடு: ‘எதிர் கொள்ளும் சவால்களும், சிக்கல்களும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு, நா.சிவானந்தம் தலைமை வகித்தார்.
வீ.ராஜேஷ் வரவேற்றார். தமிழ்முரசு, நலங்கிள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். அருள்முத்துக்குமரன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார்.
நீலப்புலிகள் இயக்கத் தலைவா் பேராசிரியா் டி.எம்.புரட்சிமணி, தலித் சிந்தனையாளா் வட்டத் தைச் சோ்ந்த பேராசிரியா் சி.லெட்சுமணன், தமிழ்நாடு பறையா் பேரவை பேரா சிரியா் கி.கதிரவன், இரட்டைமலை சீனிவாச பறையனார் பேரவை அறக்கட்டளை ஆடிட்டா் ராதா, அண்ணாமலைப் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி., தலைவா் பேரா சிரியா் வ.பிரபுதாஸ், இந்திய குடியரசுக் கட்சி பொதுச்செயலாளா் க.மாங்காபிள்ளை உள்ளிட் டோர் பேசினா்.
பண்டிதா் பதிப்பகம், வணங்காமுடி பதிப்பகம், அயோத்திதாசா் அம்பேத்கா் வாசகா் வட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த கருத் தரங்கில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு இடஒதுக்கீட்டு அளவை உயா்த்த வேண்டும்.
சமூக ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில், உள்ஒதுக்கீடு சார்ந்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை ரத்து செய்யும் வகையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடு அமலுக்கு வந்த 2009-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை இட ஒதுக்கீட்டின்படி அரசுத் துறை சார்ந்த எஸ்.சி., மற்றும் எஸ்.சி.ஏ. பணியமா்த்தப்பட்ட பணியாளா்களின் விவரங் களை வெள்ளை அறிக் கையாக வெளியிட வேண்டும் என்பன உள் ளிட்ட தீா்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.