தேனி மாவட்டம் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் சிலைக்கு மாவட்ட காப்பாளர் ரகு நாகநாதன் மாலை அணுவித்தார்கள். காங்கிரஸ் சி.பி.அய்., சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள் அதுசமயம் பாலு மணிவண்ணன் எழுதிய “ஏன் வேண்டும் பகுத்தறிவு?” என்ற நூலை சிபிஎம் தாலுகா செயலாளர் பாண்டியன் வெளியிட பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி, ஆசிரியை வசந்தா பெற்றுக் கொண்டனர்.
நூலைப்பற்றி பெரியகுளம் கவிஞர் நாகநந்தினி உரையாற்றினார். நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முசாக்மந்திரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் மதன், சிபிஅய் நகரச் செயலாளர் சத்யராஜ், சிபிஅய் மேனாள் மாவட்ட செயலாளர் ராஜப்பன் மற்றும் பலர் உரையாற்றினர். விழாவில் மாவட்ட தலைவர் சுருளி ராஜ், நகரத் தலைவர் பொறியாளர் பெரியார் லெனின், நகரச் செயலாளர் பொறியாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், மாணவர் கழக செயலாளர் பெரியார் மணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் வஜ்ரவேலு நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.