மதுரை, அக்.6 சிந்து சமவெளி திராவிட நாகரிகத்திற்கு இணையாக 2600 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இங்கு இருந்து வந்திருக்கிறது.
இங்கு இன்று நடை முறையில் புழங்கும் வழிபாடு சார்ந்த மொழி முதற்கொண்டு உருவங்கள் வரை எவையும் அங்கு கிடைக்கவில்லை.
அதேசமயம் அங்கு கிடைத்த ஓடுகளில் எழுதப்பட்டவை ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத்த ஓடுகளில் பெறப்பட்ட கிமு 3 நூற்றாண்டு தமிழ் பிராமி (வட்டெழுத்து) எழுத்துகளுடன் ஒத்துப்போவதோடு, இவை அதற்கு முந்திய கி.மு. 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. நிற்க.
இவ்வாறு தமிழ், பழந்தமிழர் சார்ந்த அனைத்தும் ஆய்வுகள் மற்றும் தரவுகள் கொண்டு தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. ஆனால் அதேசயமம் இங்கு வழிபாடுகளில் முக்கிய பங்கை தனதாக்கிக் கொண்ட சமஸ்கிருத மொழி சார்ந்து இங்கு சொல்லப்படுபவைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் போகிற போக்கில் அடித்து விடும் கட்டுக்கதைகளே எங்கும் நிறைந்திருக்கின்றன.
இணையத்தில் (முகநூல், வாட்சப்) சமஸ்கிருதம் சார்ந்து எந்த வித ஆதாரமும் இன்றி விதவிதமாக கம்பு சுற்றுபவர்கள், தொலைக்ககாட்சி விவாதங்களில் தமிழார்வலர்களோடு நேரடி யான விவாதத்தில் கலந்து கொள்ளும் போது அவர்களின் சாயம் வெளுத்து விடுகிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வில் தமிழும்,சமஸ்கிருதமும் மோதிக் கொண்ட சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்வில் கீழடி தொடர்பான உண்மைகள் வெளிப்பட்டுள்ள சூழ்நிலையில் இதையும் அறிந்து கொள்வது மேலும் நன்மை பயக்கும் என்பதால் இந்த பதிவு.
தமிழின் தொன்மை 6000 ஆண்டுகள், சமஸ்கிருத மொழியின் தொன்மை 2500 ஆண்டுகள் மட்டுமே என தரவு களுடன் தெளிவாக நிறுவுகிறார்.தமிழ் பேராசிரியர் வீ. அரசு.