தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டனப்பேரணி ஆர்ப்பாட்டம், பெருந்திரள் பொதுக்கூட்டம் நாகையில் மிக எழுச்சியாக நடந்திட உழைப்பை நல்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், நாகை மாவட்ட தலைவர்
வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணிசெயலாளர் நாத்திக.பொன்முடி, சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன், நாகை நகரத் தலைவர் தெ. செந்தில்குமார், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கவிதா, செ.க. அறிவுச்செல்வன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். உடன்: ஒரத்தநாடு இரா. குணசேகரன், செந்தூரப்பாண்டியன் (1.10.2024, நாகை).