உரத்தநாடு, அக். 5- ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரு சக்கர வாகன பேரணி, கொடியேற்று விழா, தொடக்க விழா நிகழ்வு ஒக்கநாடு மேலையூரில் நடைபெற்றது.
விழா விற்கு ஒன்றிய துணைத் தலைவர் நெடுவை கு.நேரு தலைமையேற்றார். அனைவரையும் கிளைக் கழக தலைவர் அ.ராசப்பா வரவேற்றார். நிகழ்விற்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் தீ.வா.ஞானசிகாமணி, மாவட்ட ப.க இணைச்செயலாளர் ஆ. இலக்குமணன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி தலைவர் இ. அல்லிராணி, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் க.மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணி செயலாளர் க. அறிவரசு,ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் துரை.தன்மானம்,ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் மு.செந்தில் குமார், ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் மா.கவுதமன், ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் க.பரணிதரன், கிளைக் கழக செயலாளர் நா.வீரத்தமிழன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் தீ.வா.ஞான சிகாமணி, ஒக்கநாடு மேலையூர் ஒன்றிய குழு உறுப்பினர் ம.துரைராசு, ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன், ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் ந.சுரேஷ்குமார், ஒன்றிய விவசாய சங்க பொறுப்பாளர் கு.ரவி, சி.கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பித்தனர். நெடுவை கு.அய்யாதுரை பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றினார். நிகழ்வில் உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்கள்,அனைத்துக் கட்சி நண்பர்கள்,ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரணியை திராவிடர் கழக செயல்வீரர்கள் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித் குமார் ஆகியோர் ஒருங்கிணைந்து வழி நடத்தினர்.
கொடியேற்றி வைத்தவர்கள்.
ஒக்கநாடு மேலையூர் இ.அல்லி ராணி மாவட்ட மகளிர் அணி தலைவர், பெரியார் நகர் பாளம்புத்தூர் அசோக் மழவராயர் தெரு கு.லெனின் ஒன்றிய கழக துணைச்செயலாளர், ஆற்றங்கரை தெரு மா.திருப்பதி ஒக்க நாடு மேலையூர். .சமையன்குடிக்காடு, சிலைக்கு மாலை பெரியார்நகர் இராமேஸ்வரன், கொடி, சி.கோவிந்தராசு. கருவிழிக்காடு மா.திராவிடச் செல்வம் ஒக்கநாடு மேலையூர். காவராப்பட்டு சாவடி – சந்திரபாபு கக்கரைக் கோட்டை, பெரியார் சிலை – (மாலை), கு.நேரு ஒன்றிய கழக துணைத் தலைவர், (கொடி) தீ.வா.ஞானசிகாமணி மாவட்ட கழக இணைச்செயலாளர், ஒக்கநாடு கீழையூர் கே.வி.தர்மராஜன் கிளைகழகத் தலைவர் காவராப்பட்டு., கீழவன்னிப்பட்டு வடசேரி இளங்கோ, தமிழர் தலைவர் பவள விழா வளைவு ரெ.சுப்ரமணியன் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் மேல வன்னிப்பட்டு சாலை – வெ.சக்திவேல் பெரியார்நகர், ரெ.ரஞ்சித்குமார் இல்லம் – மண்டலக் கோட்டை செந்தில்குமார், பெரியார் சிலை (மாலை-) நா.இராமகிருஷ்ணன் மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக்கழகம். (கொடி) புதுவளவு மெய்யழகன் பூவத்தூர் க.பரணிதரன் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் முக்கரை- பெரியார் பெருந்தொண்டர் முக்கரை செல்வராசு. சுடர்வேந்தன் இல்லம்., தெ.பரணிதா ஒக்கநாடு மேலையூர், வடசேரி உரத்தநாடு ரோடு முக்கம்- நா. வீரத்தமிழன், கிழக்குத்தெரு- முத்து. ராஜேந்திரன் மாவட்ட கழக துணைத்தலைவர் பெரியார் சிலை- வடசேரி குப்புசாமி, அல்லிராணி இல்லம் – அல்லிராணி வடசேரி, கண்ணுகுடி மேற்கு-பதிவாளர் அய்யாவு.
தொண்டராம்பட்டு கிழக்கு- பெரியார் பெருந்தொண்டர் உத்திராபதி, புதுவளவு- மு.செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர். வெள்ளூர் தெற்கு பெரியார் பிஞ்சு ச.தனயோகப்பிரியா ஒக்கநாடு. பாப்பாநாடு- கலைமணி இளையபாரதி திமுக கழக பேச்சாளர். புலவன்காடு- த.ஜெகநாதன் ஒன்றிய கழக தலைவர் கோவிலூர்- மா.மதியழகன் ஒன்றிய விவசாய அணித் தலைவர், (அனைவருக்கும் மதிய உணவு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரெ.சதீஸ்குமார் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது) நெடுவாக்கோட்டை, முருகையன் இல்லம். பெரியார் பெருந்தொண்டர் நெடுவை ஆறுமுகம், படிப்பகம் ரெ.சதீஸ்குமார் ஒன்றிய இளைஞரணி செயலாளர், பெரியார் சிலை -.தோ.தம்பிக்கண்ணு கிளை கழக கழக தலைவர். கக்கரக்கோட்டை, வடக்கு நத்தம்-மண்டலக் கோட்டை முத்துச் செல்வன், பாலம்-துரை. தன்மானம் ஒன்றிய தொழிலாளர் அணித் தலைவர், பொய்யுண்டார் கோட்டை இரா.குணசேகரன் மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்
பொதுக்கூட்டம்
மாலை 6 மணி அளவில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பொய்யுண்டார் கோட்டை செல்லம்பட்டி பாலத்தில் ஒன்றிய விவசாயி அணித் தலைவர் கக்கரக்கோட்டை மா.மதியழகன் தலைமையில், உரத்தநாடு ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன், மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் நா. ராமகிருஷ்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் முக்கரை க.சுடர்வேந்தன், ஒன்றிய கழக இளைஞரணி செயலாளர் கோவிலூர் சதீஸ்குமார், நெடுவாக்கோட்டை கிளைக் கழக செயலாளர் வெ. விமல் ஆகியோர் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவரணி செயலாளர் இரா. செந்தூர்பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். அனைவரையும் வரவேற்று ஒன்றிய கழக துணைச் செயலாளர் நெடுவை கு. லெனின் வரவேற்புரை ஆற்றினார்.
இறுதியாக தலைமைக் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தந்தை பெரியாரால் தமிழ்நாட்டு மக்கள் அடைந்திருக்க கூடிய பயன்களை விளக்கி சிறப்புரையாற்றினார். கக்கரைக்கோட்டை வீர. இளங்கோவன் நன்றி கூறினார். கூட்டத்தில் ஒக்க நாடு மேலையூர் கழகத்தோழர்கள் சு.ராமதாஸ்,வை. பாலர் சிங்கம், மா.தென்னகம், கோ.ஜெயராமன், இரா.மகேஸ்வரன், வெ.சக்திவேல், க.மாணிக்கவாசகம், சி. இளையராஜா, ம.ரகு, சரவணன், ச.அருணேஷ், மண்டலக் கோட்டை கழகத்தோழர்கள் இரா.மோகன்தாஸ், செந்தில்குமார், வீரச்செல்வம்,சற்குணம், அலெக்சாண்டர், தஞ்சை பேரா கு.குட்டிமணி உள்ளிட்ட கழகத் தோழர்கள், ஏராளமான பெரியார் பிஞ்சுகளும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.