அவுரங்காபாத், அக்.5 மகாத்மா ஜோதிராவ் புலே நிறுவிய ‘சத்யசோதக் சமாஜ்’ இயக்கம் 17 செப்டம்பர் 2024 நாள் 150 ஆண்டைக் கடந்து 151-ஆம் ஆண்டுக்குள் அடியெ டுத்து வைத்துள்ளது. மேலும் 17 செப்டம்பர் பெருமை மிகு சமூக சீர்திருத்தக் குரு மார்களான தந்தை பெரியார் மற்றும் பிரபோதன்கார் தாக்ரே அவர்களின் பிறந்த நாள் என்பதை நாம் அறிவோம்! இவ்வண்ணம் மூன்றையும் நினைவு கூர்ந்து முப்பெரும் விழாவாக கொண்டாட மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இருந்து செயல் பட்டு வரும் ‘கல்வி மஹரிஷி மாதவராவ் போர்டே அறக்கட்டளை’, ‘சாந்த் கபீர் கல்வி பிரசாரக் மண்டல்’, ‘சத்யசோதக் சமவிதானி சங்கம்’ ஆகிய மூன்று அமைப்புக்கள் இணைந்து பேரணி மற்றும் கருத்தரங்கை கடந்த 27.9.2024 அன்று நடத்தின.
மாலை 4.00 மணிக்கு பேரணி அவுரங்காபாத்தில் நகரிலுள்ள கிராந்தி சவுக்கில் இருந்து ஆரம்பித்து, ‘கட்கேஷ்வர் சாலையால் ஆலையின்’ மூலையில் நிறைவுற்றது. பேரணியின் போது சமூக சீர்திருத் தப் பதாகைகள் கொண்டு செல்லப்பட்டு, சமூக சீர்திருத்தக் குருமார்களின் பெயரை வாழ்த்தியும் சமுகம் சிந்தனை முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பேரணியின் பாதையில் மகாத்மா புலே, திருமதி சாவித்ரிபாய் புலே மற்றும் சாகு மகாராஜின் உருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கட்கேஷ்வர் சாலையால் ஆலையின்’ மூலையில் சமுகப் பரப்புரை பொதுக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தை கல்வியாளரும் மூத்த சமூக சீர்திருத்த வாதியுமான ராம்பாவ் பேர்காரின் முன்னிலையில், நீதியரசரும் மூத்த சமூக சீர் திருத்தவாதியுமான டி. ஆர். ஷெல்கே தலைமை ஏற்று நடத் தினார்கள். துவக்க உரையை சமூக சீர்திருத்தவாதியான பேரா சிரியர் த்வார்கபாஹு பாத்ரிகர் வழங்கினார்கள்.
சிறப்புப் பேச்சாளர்களாக தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் மகாராட்டிர மாநில துணைத் தலைவர் இலியாஸ் கீர்மாணி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகா ராட்டிர மாநில செயற்குழு உறுப்பினரும், அவுரங்காபாத் நகரச் செயலாளரு மான தோழர் அபய் டாக்ஸால் ஆகியோர் கலந்து கொண்டு தத்தம் உரையை நிகழ்த்தினார்கள்.
மகாவிகாஸ் மற்றும் மறுசீர மைப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலை வரும், மகாராட்டிராவில் தந்தை பெரியார் அவர்களின் முதல் சிலையை நிறுவியவருமான பேரா சிரியர் சுனில் வகேகரும் கல்வி மகரிஷி மாதவராவ் போர்டே அறக் கட்டளையின் மேனாள் தலைவர் மற்றும் செயலாளருமான மிலிந்த் தபாடேவும், மும்பை திராவிட வியல் மறுமலர்ச்சி மய்யத்தின் நிறுவனர் பேராயர் முனைவர் ஜோ இரவிக்குமார் ஸ்றீஃபன் அவர்களும் பாராட்டி பேசி னார்கள். சத்யசோதக் சமவிதானி சங்கத்தின் நிறுவனரும், கல்வி மகரிஷி மாதவராவ் போர்டே அறக்கட்டளையின் செயல் இயக் குநருமான வழக்குரைஞர் தனஞ்சய் போர்டே நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
பெரியாரின் கொள்கைகளை வடமாநில அரசியல் தலைவர்கள் தூக்கிப் பிடிப்பது மகிழ்ச்சியான செய்தியே!