பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான விருதுகள் பெற்றமைக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்களை பாராட்டினார்.
சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நடத்துவதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாட்டிற்காக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்பட்டன.
1. கல்விசார் விருது (பாலிடெக்னிக்) 2024
Ins titutional Excellence Award (Polytechnic) 2024
2. சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது 2024
Bes t IE(I) Students Chapter Award – 2024
3. சிறந்த முதல்வர் விருது (பாலிடெக்னிக்) 2024
Bes t Principal Award (Polytechnic) 2024
4. புதுமையான ஆசிரியர் விருது 2024
Innovative Teacher Award 2024
5. Bes t SPOC விருது (Single Point of Contact)
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்
இப் பெருமைமிகு விருதுகளை பெற்றமைக்கு இப் பாலி டெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்களுக்கு இக்கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மேனாள் முதல்வர் முனைவர் இரா.மல்லிகா, மேனாள் துணை முதல்வர் முனைவர் உ.பர்வீன், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.