5.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: சிபிஅய் அதிகாரிகள் உள்பட 5 பேர் நியமனம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசாங்க விமர்சனமாக கருதப்படும் எழுத்துகளுக்காக எழுத்தாளர்கள் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு. உத்தரப்பிரதேசத்தில் “பொது நிர்வாகத்தின் ஜாதி இயக்கவியல்” குறித்த செய்தி அறிக்கையை வெளியிட்டதாகக் கூறி, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாயா தாக்கல் செய்த மனுவை நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
* ஒரே நாடு ஒரே தேர்தல், இந்திய அரசியலுக்கும் ஆட்சிக்கும் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு பரிகாரம் அல்ல என்கிறார் பானு பிரதாப் மேத்தா.
தி இந்து:
* எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் 100 நாட்களில், வெறுப்புக்கு எதிராக பேசியதன் மூலமும், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்புவதன் மூலமும் ராகுல் காந்தி ஒரு “குறியீட்டை அமைத்துள்ளார்” என்று காங்கிரஸ் பாராட்டு.
தி டெலிகிராப்:
* சாத்தியமான தோல்வியில் இருந்து மோடியை பாதுகாக்க அரியானாவில் பாஜக முயற்சிக்கிறது. மோடியின் பேரணிகளை குறைத்து, உள்ளூர் தலைமையின் மீது பொறுப்பை சுமத்துவதற்கான ஒரு முடிவை பாஜக எடுத்துள்ளதாக கட்டுரையாளர் ஜே.பி.யாதவ் குறிப்பிடுகிறார்.
– குடந்தை கருணா