சென்னை, அக்.5 மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்கு ரைஞருமான பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்குரைஞர் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி.வில்சன், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி வழக்கிற்காக வாதாட ஆஜராகினார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி விக்டோரிய கவுரி, இருதரப்பு வாதங்களை கேட்டு, மனுதாரருக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேல்முறையீடு
இந்த நிலையில்தான், அந்த தனி நீதிபதி விக்டோரியா கவுரியின் உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை மேல்முறையீடு செய்யும் போது அந்த வழக்கிலிருந்து தனி நீதிபதி விலகவேண்டும். ஆனால் இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியனுடன், தனி நீதிபதி விக்டோரியா கவுரியும் இருந்தார்.
தவறாக நினைத்துக்கொண்டு…
இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், டிஎன்பிஎஸ்சி வழக்கில் நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், நீதிபதி ஆர்.சுப்பிரமணியனோ, நீதிபதி கவுரியை இந்த வழக்கிலிருந்து வில்சன் விலக சொல்வதாக நினைத்துக் கொண்டு அவரை நீதிமன்றத்திலேயே அவதூறாக பேசியதாகத் தெரிகிறது.
வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனமுடன் பேச வேண்டும் என பலமுறை உச்சநீதி மன்றம் கண்டித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்குரைஞர் பி.வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக, நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்குரைஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர்.
வழக்குரைஞர்கள் சங்கம் புகார்
அந்த மனுவில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மூத்த நீதி பதி ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞர் மற்றும் வழக்கில் ஆஜரான வழக்குரை ஞரை நோக்கி கண்ணிய குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும், வழக்குரைஞர்களை உரிய மரியாதையுடனும் கண்ணி யத்துடனும் நடத்துவதை உறுதி செய்ய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் அதிகார அத்துமீறல் செய்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ, அதுகுறித்து வழக்குரைஞர்கள் புகார் அளிக்க குறை தீர்ப்பு நடைமுறை கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.