டெல் அவிவ், அக்.5- அய்.நா., பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், தங்கள் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.
மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,
அய்.நா., பொதுச்செயலாளர் ஆன்ட னியோ குட்டரெஸ், இஸ்ரேல் நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், தங்கள் நாட்டிற்குள் அவர் உள்ளே நுழைய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியதாவது:
அய்.நா., பொதுச்செயலராக உள்ள ஆன்டனியோ குட்டரெஸ், ஆளுமை இல்லாத நபராக உள்ளார். எங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் கண்டித்தன; ஆனால், அய்.நா., அமைப்பு ஒன்றும் கூறவில்லை.
எனவே, மவுனம் காக்கும் யாருக்கும் எங்கள் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் தகுதி இல்லை.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது உட்பட பல அட்டூழியங்களை மேற்கொண்ட ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்றவற்றை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கவில்லை.
அவர்களை ஆதரிக்கும் குட்டரெஸ், அய்.நா., வரலாற்றில் ஒரு கறையாக எப்போதும் நினைவு கொள்ளப்படுவார்.
-இவ்வாறு கூறினார்.