16. குண்டக்க, மண்டக்க
குண்டக்க: இடுப்புப்பகுதி.
மண்டக்க: தலைப் பகுதி.
(சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூங்குவது, வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது)
17. கூச்சல், குழப்பம்
கூச்சல்: துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ – கூவுதல்)
குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.
18. சத்திரம், சாவடி
சத்திரம்: இலவசமாகச் சோறு போடும் இடம்.
சாவடி: இலவசமாகத் தங்கும் இடம்.
19. தோட்டம் துரவு , தோப்பு துரவு
தோட்டம்: செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.
தோப்பு: கூட்டமாக இருக்கும் மரங்கள்.
துரவு: கிணறு.
20. நகை, நட்டு
நகை: பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)
நட்டு: சிறிய அணிகலன்கள்.
21. நத்தம், புறம்போக்கு
நத்தம்: ஊருக்குப் பொதுவான மந்தை.
புறம்போக்கு: ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.
22. நேரம், காலம்
நேரம்: ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.
காலம்: ஒரு செயலைச் செய்வதற்கு செய்ய முற்படும் கால அளவு.
23. நொண்டி, நொடம்
நொண்டி: காலில் அடிபட்டோ, இயற்கையாகவோ உடற்குறையாக இருப்பவர்.
நொடம்: இயற்கையாகவோ, தற்செயலாகவோ கை, கால் செயலற்று போனவர்.
24. பற்று, பாசம்
பற்று: நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.
பாசம்: பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது…
25. பழக்கம், வழக்கம்
பழக்கம்: ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.
வழக்கம்: பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக) கடைப்பிடித்துச் செய்வது.
26. பட்டி, தொட்டி
பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).
தொட்டி: மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.
27. பேரும், புகழும்
பேர்: வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு, பெருமை.
புகழ்: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.
29. பங்கு, பாகம்
பங்கு: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம். (அசையும் சொத்து).
பாகம்: வீடு, நிலம். அசையாச் சொத்து.
31. வாட்டம், சாட்டம்
வாட்டம்: வளமான தோற்றம், வாளிப்பான உடல்.
சாட்டம்: வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.
– முகிலன், சென்னை- 14