பாலக்காட்டில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பை (FIRA) நிறுவிய பகுத்தறிவாளர் பிரேமானந்துக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவர் கவலைப்பட்டார், ஆனால் அவரது மரணத்தைப் பற்றி அல்ல. அவரது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நேர்காணலில், “என் உடலுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்வது கடினமாக இருக்கலாம் என்பதால், நான் வசிக்கும் சிறிய நகரத்திலிருந்து, ‘வசதிகள் சிறப்பாக உள்ள’ பெங்களூரு மாநகருக்கு மாற விரும்புகிறேன்… மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் என் உடலின் அனைத்து பாகங்களையும் கொடை அளிக்க விரும்புகிறேன். நான் புதைக்கப்படவோ தகனம் செய்யப்படவோ விரும்பவில்லை. என் உடல் ஆய்வு அல்லது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்று அறிவித்தார்.