பங்கேற்றவரின் மகிழ்ச்சிப் பகிர்வு பெரியார் என்ற பேராசானால் மட்டுமே சாத்தியமானது!

viduthalai
5 Min Read

நேற்று தந்தை பெரியாரின் பிறந்த தினம். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் அதற்காக பெரும் நிகழ்வை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தது. வீட்டில் இருந்து கிளம்புகையில் கார்மேகங்கள் சூழ்ந்த வானத்தையும் அந்தியையும் ரசிக்க முடிந்தது. ரயில் சேவை சில பழுதுகளால் சிறிது நேரம் வராமல் ஒரு திருவிழாக்கூட்டத்திற்குள் ஒரு சிட்டுக்குருவி போல சர்க்கில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தேன்.

ரயில் ஏறிய பின்பும் அங்கங்கே நிறுத்தி நிறுத்தி ஒருவழியாய் அரை மணி நேர தாமதத்தில் ப்ராஸ் ப்ளாசாவை அடைந்தேன். வெளியே எதிர்பார்த்திராத கொட்டும் மழை. காற்றும் மழையும் நிகழ்வுக்கான தாமதமும் என மனதை என்னவோ செய்துகொண்டே இருந்தது. எல்லாவற்றையும் விட மந்திரச்சொல்லான பெரியார் என்ற பெயர்.

சாலையைக் கடக்க நனைந்தாக வேண்டிய கட்டாயம். சிக்னலின் பொத்தானை அழுத்திவிட்டு பச்சை மனிதன் வரும்வரை நான் நனைந்தபடியே நின்று கொண்டிருந்தேன். ஆங்காங்கே குடையோடு ஒதுங்கி நின்று கொண்டிருக்கும் ஒரு சிலரை வழியில் கண்டேன். ஆனால் சாலையைக் கடக்க ஒருவரும் என் அருகில் இல்லை. பாதி சாலையைக் கடப்பதற்குள் ஒரு குடை மனிதர் வந்தார். தனது குடையில் பாதியை எனக்குக் காட்டி வேகமாக நடக்க முற்பட்டார். நன்றி தெரிவித்து நடக்கப்பார்த்தாலும் ஈரத்தால் என் காலணிகள் வழுக்கி வழுக்கி என்னால் அழுத்தமாகவும் வேகமாகவும் நடக்க இயலவில்லை. மிதமான வேகத்தில் ஒரு பூவைக் கூட்டிப்போவது போல என்னை அழைத்துக்கொண்டு தேசிய நூலகம் வரை கூட்டிச்சென்றார் அந்தப் பெரியவர். அவர் குடை கொடுக்கும் முன்னமே நான் முழுதும் நனைந்துவிட்டேன். நல்லவேளை ஆடைபங்கேற்றவரின் மகிழ்ச்சிப் பகிர்வு

பெரியார் என்ற பேராசானால்
மட்டுமே சாத்தியமானது!

நேற்று தந்தை பெரியாரின் பிறந்த தினம். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் அதற்காக பெரும் நிகழ்வை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தது. வீட்டில் இருந்து கிளம்புகையில் கார்மேகங்கள் சூழ்ந்த வானத்தையும் அந்தியையும் ரசிக்க முடிந்தது. ரயில் சேவை சில பழுதுகளால் சிறிது நேரம் வராமல் ஒரு திருவிழாக்கூட்டத்திற்குள் ஒரு சிட்டுக்குருவி போல சர்க்கில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தேன்.

ரயில் ஏறிய பின்பும் அங்கங்கே நிறுத்தி நிறுத்தி ஒருவழியாய் அரை மணி நேர தாமதத்தில் ப்ராஸ் ப்ளாசாவை அடைந்தேன். வெளியே எதிர்பார்த்திராத கொட்டும் மழை. காற்றும் மழையும் நிகழ்வுக்கான தாமதமும் என மனதை என்னவோ செய்துகொண்டே இருந்தது. எல்லாவற்றையும் விட மந்திரச்சொல்லான பெரியார் என்ற பெயர்.

சாலையைக் கடக்க நனைந்தாக வேண்டிய கட்டாயம். சிக்னலின் பொத்தானை அழுத்திவிட்டு பச்சை மனிதன் வரும்வரை நான் நனைந்தபடியே நின்று கொண்டிருந்தேன். ஆங்காங்கே குடையோடு ஒதுங்கி நின்று கொண்டிருக்கும் ஒரு சிலரை வழியில் கண்டேன். ஆனால் சாலையைக் கடக்க ஒருவரும் என் அருகில் இல்லை. பாதி சாலையைக் கடப்பதற்குள் ஒரு குடை மனிதர் வந்தார். தனது குடையில் பாதியை எனக்குக் காட்டி வேகமாக நடக்க முற்பட்டார். நன்றி தெரிவித்து நடக்கப்பார்த்தாலும் ஈரத்தால் என் காலணிகள் வழுக்கி வழுக்கி என்னால் அழுத்தமாகவும் வேகமாகவும் நடக்க இயலவில்லை. மிதமான வேகத்தில் ஒரு பூவைக் கூட்டிப்போவது போல என்னை அழைத்துக்கொண்டு தேசிய நூலகம் வரை கூட்டிச்சென்றார் அந்தப் பெரியவர். அவர் குடை கொடுக்கும் முன்னமே நான் முழுதும் நனைந்துவிட்டேன். நல்லவேளை ஆடையிலிருந்து நீர் சொட்டுமளவிற்கு இல்லை. தாமதமானதோடு ஒன்றாக அவர் வேறு நிகழ்வுக்காக வந்ததாகக்கூறி தேசிய நூலக வாரியத்தின் மற்றொரு நிகழ்வுக்குச் சென்றார்.

நான் பெரியாரின் நிகழ்விற்கு வந்து சேர்ந்தேன். இவ்வளவு மழையில் எது என்னை நனைய வைத்தது? ஏன் திரும்பிச்செல்ல மனம் வரவில்லை? எது என்னை நனைந்த உடை ஒட்டிய முதுகையும் சாய்த்து உட்காராமல் வைத்தது? இரண்டு மணி நேரமும் கழுத்து வலியையும் குளிரையும் நடுங்கும் உடலையும் பொறுத்துக்கொண்டு அமர்ந்தது ஏன்? அது பெரியார் என்ற பேராசானால் மட்டுமே சாத்தியமானது. அவரின் தன்னலமற்ற சமூகப் பார்வையும் தொண்டும் பெண் விடுதலைக்காகவும் பெண் கல்விக்காகவும் அவர் எடுத்த செயல்பாடுகளும் அந்த பெரியவரின் பிறந்த நாளில் கருப்புடை அணிந்து பங்குபெற்று கொண்டாடும் பெரும் நன்றி தெரிவிக்கும் நாளாகவே எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. உதட்டளவில் அல்லாமல் உள்ளத்தளவில் பெரியாரின் மகத்துவத்தை அறிந்தவர்கள் அவரைப் பற்றி இப்படி சொல்லக் கூடும். அவர் ஒரு தீர்க்கதரிசி. தன் சொத்து முழுவதையும் மக்களுக்காக எழுதி வைத்த வேறொரு பொது மனிதரை நான் இதுவரை அறியவில்லை. அவரின் செயல்பாடுகளினால் தான் பெண்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இதை பெண்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்களா அறியேன். நான் அறிந்திருக்கிறேன். அவர் மீது கொண்ட அன்பென்பது கடலினும் பெரிது.
பெரியாரின் மகத்துவமான செயல்பாடுகளுக்கு முன்னால் இதெல்லாம் அணுவினும் குறுகத்தரித்ததுதான்.

வாழ்க பெரியார்! Belated Happy 146th birthday THE GREATEST OF ALL TIME – OUR Periyar!
– ச. மோகனப்ரியா, 18.9.2024 (பேஸ்புக்கிலிருந்து)யிலிருந்து நீர் சொட்டுமளவிற்கு இல்லை. தாமதமானதோடு ஒன்றாக அவர் வேறு நிகழ்வுக்காக வந்ததாகக்கூறி தேசிய நூலக வாரியத்தின் மற்றொரு நிகழ்வுக்குச் சென்றார். நான் பெரியாரின் நிகழ்விற்கு வந்து சேர்ந்தேன். இவ்வளவு மழையில் எது என்னை நனைய வைத்தது? ஏன் திரும்பிச்செல்ல மனம் வரவில்லை? எது என்னை நனைந்த உடை ஒட்டிய முதுகையும் சாய்த்து உட்காராமல் வைத்தது? இரண்டு மணி நேரமும் கழுத்து வலியையும் குளிரையும் நடுங்கும் உடலையும் பொறுத்துக்கொண்டு அமர்ந்தது ஏன்? அது பெரியார் என்ற பேராசானால் மட்டுமே சாத்தியமானது. அவரின் தன்னலமற்ற சமூகப் பார்வையும் தொண்டும் பெண் விடுதலைக்காகவும் பெண் கல்விக்காகவும் அவர் எடுத்த செயல்பாடுகளும் அந்த பெரியவரின் பிறந்த நாளில் கருப்புடை அணிந்து பங்குபெற்று கொண்டாடும் பெரும் நன்றி தெரிவிக்கும் நாளாகவே எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. உதட்டளவில் அல்லாமல் உள்ளத்தளவில் பெரியாரின் மகத்துவத்தை அறிந்தவர்கள் அவரைப் பற்றி இப்படி சொல்லக் கூடும். அவர் ஒரு தீர்க்கதரிசி. தன் சொத்து முழுவதையும் மக்களுக்காக எழுதி வைத்த வேறொரு பொது மனிதரை நான் இதுவரை அறியவில்லை. அவரின் செயல்பாடுகளினால் தான் பெண்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இதை பெண்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்களா அறியேன். நான் அறிந்திருக்கிறேன். அவர் மீது கொண்ட அன்பென்பது கடலினும் பெரிது.

பெரியாரின் மகத்துவமான செயல்பாடுகளுக்கு முன்னால் இதெல்லாம் அணுவினும் குறுகத்தரித்ததுதான்.
வாழ்க பெரியார்! Belated Happy 146th birthday THE GREATEST OF ALL TIME – OUR Periyar!

– ச. மோகனப்ரியா, 18.9.2024 (பேஸ்புக்கிலிருந்து)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *