பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜராஜன் எழுதிய “காற்றலையில்…” சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் அரசின் ”சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024”இல் புதிய அறிமுகம் என்னும் பிரிவில் பரிசுபெற்றுள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்து, சிங்கப்பூர் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் தமிழ் மாமணி இரா.தினகரன் அவர்கள் சால்வை அணிவித்துச் சிறப்பித்தார். தமிழ் மாமணி இரா.தினகரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தும் நினைவுப் பரிசை வழங்கியும் சிறப்பித்தார்.