காரைக்குடி, அக். 4- காரைக்குடி யில் சுயமரியாதை இயக்க நூற்றாண் டையொட்டி திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கம் மற்றும் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா தெரு முனைக்கூட்டம் 1.10.2024 அன்று மாலை 5.30 மணி அளவில் ராஜீவ் காந்தி சிலை அருகில் நடைபெற்றது .
காரைக்குடி மாவட்ட தலைவர் ம.கு.வைகறை தலைமை வகித்து பரப்புரை கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட செயலாளர், சி.செல்வ மணி வரவேற்புரை ஆற்றினார்.
திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் தனது கருத்துரையில் “குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் காரைக்குடியில் சிறப்பாக நடத்தியதையும், தந்தை பெரியாரைப் போல் குன்றக்குடி அடி களாரும் சமுதாயப் பணியில், ஜாதி ஒழிப்பு பணியில் ஈடுபட்டதையும், ஸநாதன காவி வேறு, சமூக நீதி காவி வேறு என்பதை எடுத்து விளக் கினார்.
தொடர்ந்து கழகச் சொற்பொழி வாளர் இராம அன்பழகன் சிறப்பு ரையில்,
“தந்தை பெரியார் பிறந்த நாள் பல்வேறு நாடுகளில் கொண் டாடப்பட்டு வருகிறது. இன்றைய இளைஞர்கள் பெரியாரை தேடிப் படிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதுதான் ஸநாதனிகள், ஜாதி வெறியர்கள் வயிறு எரிவதற்கும், பொது விவாத அரங்கில் அடாவடித்தனம் செய்வதற்கும் அதுதான் முதன்மையான காரணம் ” என்று எழுச்சி உரையாற்றினார்.
பரப்புரை நிகழ்வில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சு.முழுமதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் துரை செல்வம் முடியரசன், கிராம நிர்வாக ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிறுவனர் போஸ், காரைக்குடி மாநகரச் செயலாளர் அ .பிரவீன் முத்துவேல், மாநகரத் துணைத் தலைவர் பழனிவேல்ராசன், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டிவீ.பாலு, பகுத்தறிவாளர் கழக தோழர் த. பாலகிருஷ்ணன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அ.ஜோசப், தேவகோட்டை நகரத் தலைவர் வீ.முருகப்பன் தேவகோட்டை ப.க அமைப்பாளர் சிவ. தில்லை ராசா, திமுக மாவட்ட சிறுபான்மை குழு துணைத் தலைவர் சேவியர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன் நன்றி கூறினார்.
திராவிடர் கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்: கீழவளவு முத்துலட்சுமி, இளையான்குடி முகிலன், காரைக்குடி தமிழ்மாறன்