கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அவர்களின் (2.10.2024) பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து பெரியார் உலகத்திற்கு நிதியாக ரூ.5,000 வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து கூறினார். *வழக்குரைஞர் சு.குமாரதேவன் பிறந்த நாளையொட்டி (2.10.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு ரூ.10,000/- நன்கொடையாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் வழங்கினார். (சென்னை) *பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் பேராவூரணி வை. சிதம்பரத்தின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (நாகை, 1.10.2024)