மதுரை, அக். 3- 14-09-2024 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் வீரமணி அரங் கத்தில் மதுரை சிந்தனை மேடையின் சார்பாக முதல் சிறப்புக்கூட்டமாக இசையோடு கலந்த கலைவாணரின் கதை இசையோடு தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு மதுரை சிந்தனை மேடையில் தலைவர் உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா தலைமை உரை ஆற்றினார். அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று முதல் நிகழ்ச்சியாக நடத்தக்கூடிய வாய்ப்பு பெற்றதற்கு தன்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
முதல் நிகழ்ச்சி மக்கள் அபிமானம் ஒரு முற்போக்கு கலைஞரை வாழ்வியல் நெறியை நகைச்சுவை மூலம் எடுத்துச் சொன்ன கலைவாணர் பற்றிய நிகழ்ச்சியாக நடைபெறுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக கூறினார். மாவட்டத் தலைவர் அ. முருகானந்தம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இனி தொடர்ந்து இந்த அரங்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும் அதற்கான பணியை தடையில்லாமல் கொண்டு செல்வோம் எனக்கூறினார். தொடக்க உரையாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில தலைவர் முனைவர் வா.நேரு தொடங்கி வைத்தார்.
இசைப் பேருரை நிகழ்த்த வந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சோழ.நாகராஜனை அறிமுகம் செய்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் சுப.முருகானந்தம் பேசினார்.
நிகழ்ச்சியை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
ஜெ.வெண்ணிலா, சோழ நாகராஜன் ஆகியோருக்கு அ.முருகானந்தம் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். இசைக்கலைஞர்களுக்கு மாவட்ட காப்பாளர் சே. முனியசாமி சால் வை அணிவித்தார். மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.
திரளான தோழர் தோழி யர்களுக்கு மத்தியில் கலைவாணரின் பிறப்பு,இளம்வயதில் அவருக்கு இருந்த கலை ஆர்வம் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் சிறுவனாக தொடங்கி நாடகக்கலையைக்கற்று நாடகம், திரைத்துறை உள்ளிட்டவற்றை இடையிடையில்பாடல்களை இசையுடன்பாடி ரசிக்க வைத்தார்.
அவரிடம் இருந்த நகைச்சுவை உணர்வுநாடகத்தின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஆழமான கருத்துகளை எடுத்துச் சொல்வதோடு தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை தன்னிடம் இல்லை என்று நாடி வந்தவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாக புரவலராக வாழ்ந்ததை எடுத்துக் கூறினார்.
வறுமையில் இருந்த நிலையிலும் கூட தன்னை நாடி வந்தவர்களுக்கு மற்றவர்களிடம் பணத்தை வாங்கி வழங்கிய மாமனிதர் தான் கலைவாணர் என்பதை எடுத்துக் கூறி அனைவரையும் ரசிக்க வைத்தார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அனைவரும் உரையையும் பாடலையும் கேட்டு ரசித்தனர். நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் நா. முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராக்கு அ.வேல்முருகன், சுசிலா, சுமதி, பேரவை தலைவர் கா .சிவ குருநாதன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.மகேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் கோ.பவுன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ. இராஜா, முரளி, திவ்யா, மகாமதி, மாணவர் கழகம் சீதேவராஜ் பாண்டியன், ரமேஷ், பெரியார் செல்வன், மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் க,சிவா, இனியா, மாசு மோதிலால், பேக்கரி கண்ணன், சாமிநாதன், அழகு பாண்டி சோ.சுப்பையா, கோரா மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேஷ் நன்றி கூறினார்.