தஞ்சாவூர், அக். 3- அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 22.09.2024 அன்று மாலை தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் ஊர்வலம் மற்றும் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது
ஊர்வலம்
22.09.2024 மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பெரியார் நினைவுத்தூண் அருகில் பேண்டு வாத்தியம் முழங்க அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்துடன் கழக மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி மற்றும் கழகத் தோழர்கள் கையில் கழகக்கொடியுடன் கழக லட்சிய முழக்கமிட்டு அணிவகுத்து வந்தனர். காந்தி சாலை, பெரியார் சிலை, சிவகங்கை பூங்கா தெற்கு ராஜவீதி, கீழ ராஜ வீதி, கொண்டிராஜபாளையம் கீழ அலங்கம், கீழவாசல் வழியாக பனகல் கட்டடம் பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது. பொதுமக்கள் இருபுறமும் கூடி நின்று பெரியார் பட ஊர்வலத்தை பார்த்து மகிழ்ந்தனர். தஞ்சை மாநகரத் தலைவர் ப.நரேந்திரன் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்றார்.
காப்பாளர் மு.அய்யனார் ஊர்வலத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் சிந்தனையரசு, தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் நா.வெங்கடேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் அ.தனபால், ப.க. மாநகர் செயலாளர் சி.நாகநாதன் ஒன்றிய ப.க.செயலாளர் லட்சுமணசாமி, புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் சாமி.கலைச்செல்வன், கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கீழவாசல் பகுதி பெ.கணேசன், ஈ.பி. காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, மருத்துவக்கல்லூரி பகுதி தலைவர் த.கோவிந்தராசு, மாநகர இளைஞரணி செயலாளர் மா.இராஜராஜன் ஆகியோர் ஊர்வலத்திற்கு முன்னிலையேற்றனர்.
பொதுக் கூட்டம்
பெரியார் படம் ஊர்வலம் நிறைவில் 22.09.2024 அன்று இரவு 7 மணியளவில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் தந்தை பெரியார் 146-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகுத்து உரையாற்றினார். மாநகர இணைச்செயலாளர் இரா.வீரகுமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.ராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், தஞ்சை வடக்கு ஒன்றியத்தலைவர் பா.சுதாகர் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, காப்பாளர் மு.அய்யனார் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் இரா.ஜெயகுமார் ஆகியோர் தலைமையேற்று உரையாற்றினர். தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிகுமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் ஆகியயோர் கலந்துரையாற்றினர்.
அனைத்துக் கட்சியினர் வாழ்த்துரை
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க தலைமைசெயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தி.மு.க மாநகரச்செயலாளர் மேயர் சன்.ராமநாதன், தி.மு.க மருத்துவரணி மாநில துணைச்செயலாளர், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத்தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத்தலைவர் ஜெயினுலாவுதீன், மனித நேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் I.M.பாதுஷா, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்டச்செயலாளர் வல்லம் ரியாஸ், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டத்தலைவர் செல்ல.கலைவாணன், ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் எம்.பி.நாத்திகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இறுதியாக திராவிடர்கழக கிராம பிரசாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் பாவலர் பொன்னரசு, கோபு.பழனிவேல் கண்டியூர் குழுவினர் வழங்கிய இன எழுச்சி இசை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் எராளமான கழகத்தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் பங்கேற்றோர்
ம.தி.மு.க மாநகர செயலாளர் துரைசிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் கல்பனா, திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் துரைராசு, ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன் உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர், மாநல்.பரமசிவம், அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர், கி.ஜவகர் துணைச் செயலாளர், ராஜேந்திரன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் லெட்சுமணன் ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், மன்றோ மதியழகன், பூத்தூர் ஒன்றிய துணைத் தலைவர் புகழேந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் ப.விஜயக்குமார், மகளிரணி ஜெயமணிகுமார், அ.கலைச்செல்வி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சந்துரு, மாவட்ட மகளிர்பாசறை தலைவர் அஞ்சுகம், உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பிரபாகரன், மாநில ப.க. அமைப்பாளர் ரமேஷ், வளப்பக்குடி பாலசுப்ரமணியன், வீதிநாடக இயக்குநர் பெரியார்நேசன், மாவட்ட ப.க. தலைவர் அழகிரி மாவட்ட ப.க. இணைச் செயலாளர் லெட்சுமணன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ், A.V.M.குணசேகரன் திருவையாறு கவுதமன், அ.பெரியார் செல்வன், கு.நேரு, ப.க.ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, எடமேலையூர் லெட்சுமணன், சடையார்கோவில் குழந்தைவேல், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் நாராயணசாமி, மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் ந.எழில், ஒக்கநாடு கீழையூர் கவுதமன், அஞ்சம்மாள், விவேக விரும்பி, தெற்கு நத்தம் முத்துச்செல்வம், வல்லம் அழகிரி, விக்ரபாண்டியம் அழகிரி, மகளிரணி ப.சாந்தி, ப.யாழினி, பிள்ளையார்பட்டி முருகேசன், திருவையாறு தேன்மொழி, மதுரகவி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.