சேலம், அக். 3– சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் ‘நீதிக்கட்சி முதல் திமுக வரை பெரியார் பார்வை’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கருத்தரங்கத்திற்கு பகுத்தறி வாளர் கழக பொதுச் செயலாளர் வா.தமிழ்ப்பிரபாகரன் தலைமை வகித்தார். இளைய தமிழகம் அமைப்பை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ முத்து வரவேற்புரை ஆற்றினார்.
தொடக்க உரையாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் இரா.சுப்ரமணியன் தந்தை பெரியாரின் தொண்டுகள் பற்றி சிறப்பாக உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக பொறியாளர் ராஜேந்திரன் தனக்கு எவ்வாறு பெரியாரின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது என்றும் தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தான் பெற்ற கல்வி வாய்ப்பு பற்றியும் நெகிழ்ந்து கூறினார்.
எழுத்தாளர் வே.மதிமாறன் உரை.!
பெரியார் பிறந்த நாள் நிகழ் வில் சிறப்புரையாக எழுத்தாளர் வே.மதிமாறன் பல்வேறு தரவு களுடன் வரலாற்று நிகழ்வு களை ஆதாரமாக தொகுத்து நீண்டதொரு உரை ஆற்றினார்.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸில் முதல்வர் ராஜாஜி அவர்களால் ஏன் கொண்டு வரப்பட்டார் என்றும் காங்கிர ஸில் இணைந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்னும் பெரியார்,
திரு.வி.கல்யாண சுந்தர முதலியார், வரதராஜர் நாயுடு ஆகிய மூவரில் தந்தை பெரியார் மட்டுமே தனித்துவமாக விளங்கி ஒடுக்கப்பட்ட தாழ்த்த படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸில் இருந்து போராடினார். பின்பு நீதிக்கட்சியை ஆதரித்து அதன் தொடர்ச்சியாக சுயமரியாதை இயக்கம் என்னும் புது கட்சியை தொடங்கியதன் நோக்கம் பற்றி கூறினார்.
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிப்பு.!
1925 முதல் 1937 வரை பல்வேறு நிகழ்வுகள் போராட் டங்கள் சுயமரியாதை இயக் கத்தை தோற்றுவித்த பின் வரலாற்று சிறப்பு வாய்ந்த 1929 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டு நிகழ்வு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சிறப்பு குறித்தும் விவரித்தார்.
1937 ஆம் ஆண்டு தந்தை பெரியார் முன்னெடுத்த மாபெரும் போராட்டம் ஆன இந்தி எதிர்ப்புப் போராட்ட மானது இந்திய சுதந்திரப் போராட்டத்தை விட பன் மடங்கு வலிமையானது என்றும் இந்திய திணிப்பதன் மூலம் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாபெரும் தடையாக அமையும் என்று கருதிய தந்தை பெரியார் அதற்காக போராட்ட களம் கண்டு வெற்றி கண்டார்.
1944 – திராவிடர் கழகம்
எனப் பெயர் மாற்றம்.!
தந்தை பெரியார் அவர்கள் 1944ஆம் ஆண்டு சேலம் மாநகரில் நேரு அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் தான் சுயமரியாதை இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து அண்ணா அவர்கள் பிரிந்து சென்று தந்தை பெரியாரின் பிறந்த நாளிலேயே திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி துவங்கினார். பின் தேர்தல் களத்தில் வெற்றி பெற்ற பிறகு தந்தை பெரியார் கொள்கைகளுக்கு எல்லாம் சட்ட வடிவம் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று அண்ணா கூறினார். என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வை சுட்டிக்காட்டி பேசினார்.
2024 – தற்போதைய
திமுக ஆட்சி .!
அண்ணா அவர்கள் தனது ஆட்சியை தனது பாட்டன்கள் நீதிக்கட்சியின் பாதையில் தான் எங்கள் திமுக ஆட்சி பயணிக்கிறது என்றார்.
அதனை வழிமொழியும் விதமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் தான் வெற்றி பெற்ற பிறகு தனது திராவிட மாடல் ஆட்சியானது நீதிக்கட்சியின் நீட்சியாக அமையும் என்று கூறினார்.
அண்ணா ஆட்சியை அங்கீ கரிக்க தந்தை பெரியார் இருந்தார். அண்ணாவை தொடர்ந்து நல்லாட்சி புரிய கலைஞர் இருந்தார். கலைஞருக்கு பின் தளபதி ஸ்டாலின் அவர்களை வழிநடத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் நம்மை போன்ற பெரியாரிஸ்ட்களும் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை யில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சமூக நீதி நாளாக கடைபிடித்து உறுதிமொழி ஏற்று விடை பெறுவோம் என்று கூறினார்.
கருத்தரங்க நிகழ்விற்கு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (103 வயது) பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் மாயக்கண்ணன், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணி ராஜு, சேலம் மாநகர செயலாளர் கல்பனா,மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர் கோவி.அன்புமதி, மேட்டூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் அறிவுச்செல்வம், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் வினோத்குமார் ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அருண்குமார், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மருத்து வர்கள் முத்தரசு, மெர்சி, முரளி, ஆசிரியர்கள் முனுசாமி, பாலசுப்பிரமணியம், ராஜா, சோழன், பாலா,முருகேசன், பொறியாளர்கள் கோபி, சொர்ணராஜ், தர்மராஜ், தலைமை கழக அமைப்பாளர் கா.நா.பாலு, சேலம் மாவட்ட தலைவர் இளவழகன், மாவட்ட செயலாளர் பூபதி, இமயவரம் பன், ஆத்தூர் மாவட்ட அமைப்பாளர் விடுதலை சந்திரன், ஆத்தூர் மாவட்ட செயலாளர் சேகர், மனோகர், இளைஞர் அணி பொறுப்பாளர் வேல்முருகன், காரிபட்டி மோகன், செல்வராஜ், ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
கருத்தரங்க விழாவிற்கு நன்றியுரையை சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வீரமணி ராஜா கூறினார்.