உரத்தநாடு, அக். 3- நெடுவை இராமச்சந்திரன்-இராசம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 24ஆம் ஆண்டு நினைவுநாள் சொற்பொழிவு “தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மலர் வெளியீடு தஞ்சை ரூபிகா அரங்கத்தில் நடை பெற்றது.
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன் வரவேற்றார். கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் தலைமை வகித்தார். மாநகர கழகத்தலைவர் பா.நரேந்திரன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம் ஆகியோர்முன்னிலைவகித்தார்கள். ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மா.தவமணி படத்தினை திறந்து வைத்தார்.
தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் மலரினை கவிஞர் நந்தலாலா வெளியிட்டார் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மா.தவமணி,பேரா.பி.வி.ஆர்.வீரமணி, அமுமுக பகுதி செயலாளர் செ.செந்தில்குமார், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செய லாளர் நா.இராமகிருட்டிணன், மகளிரணி பொறுப்பாளர் சி.கலைச்செல்வி,ப.க.தலைவர் ந.காமராசு , மாவட்ட வழக்குரைஞர்அணி தலைவர் க.மாரிமுத்து, கட்டட எழிற்கலை வல்லுனர் ப.பாலகிருட்டிணன், மாணவர்தாளகம் அகிலாஇளந் திராவிடன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். இறுதியில்சுயநலம்-பிறநலம் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா உரையாற்றினார்.
அறக்கட்டளைக்கு அமுமுக பகுதி செயலாளர் செ.செந்தில்குமார் -பிரதீபா குடும்பத்தினர் ரூ.10.000/ வழங்கினார். அறக்கட்டளைக்கு மாவட்ட கழகத்தலைவர் சி.அமர்சிங் ரூ10,000, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மா.தவமணி ரூ.1000, பேரா.பி.வி.ஆர்.வீரமணி சுயமரியாதைச் சுடரொளி பி.விஇராமச்சந்திரனார் நூற்றாண்டுநினைவாகரூ.5,000 வழங்குவதாக அறிவித்தார்கள்.
மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன்,மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு,மாவட்ட ப.க. அமைப் பாளர் கு.கவுதமன்,மாநகர இணைச்செயலாளர் இரா.வீரக் குமார், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன்,திருவையாறு நகரத்தலைவர் ஆ.கவுதமன், பூதலூர் ஒன்றிய தலைவர் மா.வீரமணி, ஒன்றிய துணைச்செய லாளர் ப.விசயக்குமார் , பூதலூர் நகரசெயலாளர் செயச்சந்திராசந்தானம்’ உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கு.நேரு, ஒன்றிய துணைச்செயலாளர் கு.லெனின், பெரியார்பெருந்தொண்டர் எம்.எஸ்.கலியபெருமாள்,நெடுவைதை.நாகராசன் ஒக்கநாடுமேலையூர் தன்மானம், மகேசுவரன்,தஞ்சை இளைஞரணி பொறுப்பாளர்கள் க.இராசராசன், க.அ.பெரியார் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியை தஞ்சைதெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஒருங்கிணைத்தார். தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலா ளரணி தலைவர் அழகு.இராம கிருட்டிணன் நன்றி கூறினார்.