காரைக்குடி, அக். 3- காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டமானது காரைக்குடி குறள் அரங்கத்தில் 02.10.2024, புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.சு. கண்மணி, மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் செல்வம் முடியரசன், தேவகோட்டை ஒன்றிய நகரத் தலைவர் சிவ. தில்லைராசா ஆகியோர் முன்னிலையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட கழகத் தலைவர் ம.கு. வைகறை, கழகப் பேச்சா ளர் தி.என்னாரெசு பிராட்லா, கழகத் தோழர்கள் ந. ஜெகதீசன், தேவகோட்டை நகரத் தலைவர், வீ. முருகப்பன், காரைக்குடி மாநகரச் செயலாளர் அ. பிரவீன் முத்துவேல், காரைக்குடி மாநகரத் துணைத் தலைவர் பழனிவேல் ராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.சு. கண்மணி பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகளை பாராட்டியதோடு, திருச்சி நாத்திகர் மாநாடு குறித்துப் பேசினார்.. மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் திருச்சியில் நடைபெற இருக்கின்ற மாநாட்டுப் பணிகள் குறித்தும், அப்பணிகளை எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுத்துவது என்பது குறித்தும், விரைவில் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்ற மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் குறித்தும், திராவிடர் கழக தோழர்களின் ஒத்துழைப்பு குறித்தும் பேசினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர்ம.கு. வைகறை பகுத்தறிவாளர் கழகம் என்ன மாதிரியான செயல் பாடுகளை முன்னெடுக்க வேண்டும், எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.
கழகக் காப்பாளர் சாமி திராவிட மணி மாநாட்டிற்கு நிதி திரட்டும் வழிகளை எடுத்துரைத்ததோடு உங்களுக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம், களப்பணிகளை சிறப்பாக செய்யுங்கள் என ஊக்கம் தந்தார். கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா ஆசிரியரின் செயல்பாடுகள், கழகப் பணிகள் நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் இவற்றை அவருக்கே உரிய நடையில் விளக்கியதோடு முன்னுதாரணங்களையும் எடுத்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சிவ. தில்லைராசா, வீ. முருகப்பன், ந. ஜெகதீசன் ஆகியோர் மாநாட்டிற்கான பணிகளில் தங்கள் ஒத்துழைப்பு குறித்து பேசினார்கள்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள காரைக்குடி மாநகரச் செயலாளர் அ. பிரவீன் முத்துவேல், காரைக்குடி மாநகரத் துணைத் தலைவர் பழனிவேல் ராசன் ஆகியோருக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பொன்துகில் அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 28, 29ஆம் தேதிகளில் திருச்சி யில் நடைபெற இருக்கின்ற நாத்திகர் மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் குறித்து திட்டமிடல்
பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய தோழர்களை இணைப்பது மற்றும் அடுத்த கட்ட பணிகள் குறித்த திட்டமிடல்
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டிக்கான வரவு செலவு ஒப்படைப்பு குறித்த மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக பகுத்தறி வாளர் கழகம் த. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.