ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

2 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேத நூல்களை அளிக்க மாநிலங்களவை தலைவர் தன்கர், கல்வி அமைச்சருக்கு ஆலோசனை. எதற்கு? என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

* அரியானா நூஹ் மாவட்ட வன்முறையில் இதுவரை ஆறு பேர் பலி. சிறுபான்மை மக்கள் வெளியேறுகின்றனர்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* திமுக தலைவரும் தமிழ் நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 17-ஆம் தேதி, ராமநாதபுரத்தில் திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் சந்திப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மணிப்பூரில் வெட்கக்கேடான பாலியல் வன்கொடுமையை படம் பிடிக்கும் காட்சிப் பதிவு ஜூலை 19 அன்று வெளிவந்தது, இது தேசிய சீற்றத்தைத் தூண்டியது மற்றும் நாடாளுமன்றத்தில் அதிர்வுகளை கண்டது. என கார்கில் ராணுவ வீரர் பேட்டி.

* அவதூறு வழக்கில் தான் தவறு செய்யவில்லை, மன்னிப்பு கேட்கும் எண்ணம்  துளியும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி உறுதியான பதில்.

* அறிவியலை அறிவியலாகவும், வரலாற்றை வரலாறாகவும், புராணத்தை கட்டுக்கதையாகவும் பார்க்க வேண்டும். அவைத் தலைவர் புராணக் கதைகள் பற்றி கூறியது சரியே என சி.பி.எம்.கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 5,825 ஆசிரியர் பணியிடங்களில் 861 இடங்கள் எஸ்சி, 516 எஸ்டி, 1705 ஓபிசி பிரிவினருக்கு என கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்  நாடாளு மன்றத்தில் தகவல்.

தி இந்து:

* நாடாளுமன்றத்தின் மூலம் வன மசோதாவை புல்டோசர் செய்து மோடி அரசு சட்டம் இயற்றும் செயல்முறையைத் தகர்த்தது – காங்கிரஸ்.

தி டெலிகிராப்:

* 2024இல் சாதாரண நாடாளுமன்றத் தேர்தலை “அவர்கள்” அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி, 2019 தேர்தல் “புல்வாமா சோகம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு கடத்தப்பட்டது” ‘2024 தேர்தலுக்கு முன் ஏதோ பெரிய விடயம் நடக்கும்…. எதுவும் நடக்கலாம். அதிகாரத்திற்காக எதையும் செய்ய முடியும்’ என மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அச்சம்.

* உள்துறை அமைச்சகத்தில் 1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் காலியாக உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *