சென்னை, அக். 2- பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் பவள விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் 6.10.2024 அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெறுகிறது.
பெரியார் களம் இறைவி வரவேற் கிறார். பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் பவள விழாவையொட்டி அவர் எழுதிய 4 புத்தகங்களை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை சிறப்புரை ஆற்றுகிறார்.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப்பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத் தேவன் வாழ்த்துரை ஆற்றுகிறார்கள்.
தலைமைப்பேராயர் முனைவர் ஜோ, இரவிக்குமார் ஸ்டீபன், பேராசிரியர் மருத்துவர் பிருதிவிராஜ், பேராசிரியர் முனைவர் த.ஜானகி, பேராசிரியர் முனைவர் இரா.செந்தாமரை உள்பட பலர் புத்தகங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
மருத்துவர் இரா.கவுதமன் ஏற்புரை ஆற்றுகிறார். மருத்துவர் க.பி.இனியன் நன்றி கூறுகிறார். கழகத் துணைப் பொதுச் செயாலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார்.
வெளியிடப்பட உள்ள புத்தகங்கள்:
பழைய வரலாறு! புதிய பாடம்!!, விதி நம்பிக்கையை விழ்த்திய அதிநவீன மருத்துவங்கள்!, மரணம், மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்.