கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் வடசேரிபகுதியில் பொதுமக்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர், கழகத் தோழர்கள் குமரி செல்வன், முத்துவைரவன், பெருமாள் பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.