போடிநாயக்கனூர், அக். 2– தேனி மாவட்ட அமைப்பாளர் ஆண்டிபட்டி கண்ணன். அவருடைய தாயார் சீதாலட் சுமி தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார்.
அவருடைய இரு கண்களும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அவரது உடல் போடிநாயக்கனூர் பெரியார் சமத்துவம் எரிவாயு மயானத்தில் எரியூட்டப்பட்டது.
இரங்கல் கூட்டம்
கழக காப்பாளர் ரெகு.நாகநாதன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர்கள் மாவட்டத் தலைவர் சுருளிராஜ், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் கூடலூர் ஜனார்த்தனன், கம்பம் மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் செந்தில், கம்பம் கே. கே. பட்டிதோழர்கள், தேனி நகர தோழர்கள், ஆண்டிபட்டி திமுக நகர செயலாளர், ஆதி தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர், தமிழ் புலிகள்அமைப்பு தோழர்கள், உறவினர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் கண்ணன்அவர்கள் நன்றி தெரிவித்தார்.