புதுடில்லி,ஆக.4 – வரும் மக்களவைத் தேர்தல் தொடர் பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி கருநாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நேற்று 3.8.2023 டில்லியில் ஆலோசனை நடத்தினர். இதில் முதலமைச்சர் சித் தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் பரமேஷ்வரா, தினேஷ் குண்டுராவ் உட்பட 50 மூத்த தலைவர்கள் பங் கேற்றனர். அப்போது மல்லி கார் ஜூன கார்கே, சட்டப் பேரவைத் தேர்தலில் காங் கிரஸை வெற்றி பெற வைத் ததை போல, மக்களவை தேர்தலிலும் வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கருநாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் குறி வைத்து இப்போது பணிகளை தொடங்க வேண்டும். இதற் காக தனி தேர்தல் வாக்குறுதி, தொகுதிவாரியாக வியூகம், மாவட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து தலைமை முடிவெடுக்கும் என அறி வுறுத்தியதாக கூறப்படுகிறது. மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், தேர்தலின் போது அனைத்து வாக்குறுதி களையும் விரைந்து நிறை வேற்ற வேண்டும். எக்கார ணம் கொண்டும் மக்களை மத ரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ பிரித்து அரசியல் செய்யக்கூடாது. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழல் செய்வதை அனுமதிக்க முடியாது. யாராவது ஊழல் புரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச ரிக்கை விடுத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருநாடகாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : ராகுல்காந்தி
Leave a comment