அமெரிக்கா – டெலாவரில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வு

viduthalai
2 Min Read

டெலாவர், அக்.1 அமெரிக்கா டெலாவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா காணொலி வழியே கருத்தரங்கம் 17.9.2024 செவ்வாய் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது .நிகழ்ச்சியை மன்ற நிறுவனர் துரைக்கண்ணன் ஒருங்கிணைத்தார்.

செங்குட்டுவன் காட்டமராஜ் நெறியாளுகை செய்தார் .திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் “சமூக நீதி காவலர்கள்” எனும் தலைப்பில்

வ.உ.சி. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை பற்றிய சிறப்பான அவர்களின் தொண்டின், தியாகத்தின் முத்திரை பதித்த கருத்துக்களை தன்னுடைய உரையில் எடுத்துரைத்தார். மூவருக்குமான அணுக்க த் தொடர்புகளையும் பதிவு செய்தார்.

அறிவுக்கருவி ஊடகவியலாளர் அருண் ராஜேந்திரன் “அமெரிக்காவில் பெரியாரின் தேவை “எனும் தலைப்பில் அமெரிக்காவிலும் ஜாதி, மூடநம்பிக்கை ,இந்திய மக்களிடையே நிலவுகிறது. ஆங்காங்கு ஜாதீய ஒடுக்கு முறையும் தென்படுகிறது. எனவே இங்கேயும் பெரியார் தேவைப்படுகிறார் என்பதான தமது சிறப்பு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

நிகழ்வில் பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன், வட கரோலினா இயக்கத் தோழர் மோகன் வைரக்கண்ணு, நியூ ஜெர்சி பெரியார் பன்னாட்டு அமைப்பை சேர்ந்த இளமாறன் பெருமாள், மேனாள் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் நாஞ்சில் பீட்டர், பெருஞ்சித்திரனாரின் மகள் சித்திரச் செந்தாழை, மணிமேகலை, சித்ரா மகேஷ், டெய்சி ஜெயப்பிரகாஷ் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில பொறுப்பாளர் முனைவர் நேரு, டாக்டர் சரோஜா இளங்கோவன், செல்வா, கார்த்தியாயினி, செல்வராஜ், ராஜ்குமார், பிரசாத் பாண்டியன், சண்முகம், அகிலன் ஜெயராமன், சுப்பு பழனிச்சாமி, சாகுல் ஹமீது, கார்த்திக், தீபக் பிரியா, அனிதா தண்டபாணி, அறிவு பொன்னி, எழில் வடிவன், கலைச்செல்வி, சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்று அவர்களில் சிலர் சிறப்பான கேள்விகளையும் தங்கள் கருத்துக்களையும் எடுத்துரைத்தனர். கேள்வியாளர்களின் வினாக்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பதில் அளித்து கருத்துக்களை பதிவு செய்தார்.சமூகநீதி மாதமாக செப்டம்பர் மாதத்தை மய்யப்படுத்தி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்புக்குரியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *