செப்.28 அன்று அமெரிக்காவின் ‘கிரீன் லெவல்’ (Green level) ஆரம்பப் பள்ளி பூங்காவில் திராவிடநண்பர்கள் சுமார் 35 பேர் கலந்து கொண்டார்கள்.குழந்தைகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. காலை 7.30க்கு ‘Run for Periyar’ ஓட்டம் ஆரம்பம் ஆனது. பெரும்பாலோர் ‘Run for Periyar’ சட்டை அணிந்திருந்தனர். பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் 5 கிலோமீட்டர் ஓட்டம் ஓட ஆரம்பித்தனர். சிலர் நடந்து வந்தனர். பெரியார் கொள்கைகளைப் பேசிக்கொண்டும் – ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டும் நடந்தனர். காலை 10 மணி அளவில் ஓட்டம் முடிவடைந்தது. நண்பர்கள் மணிவண்ணன், பாலா, இனிய காலை உணவு வழங்கினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் பரிசாக திராவிடர் கழக புத்தகங்கள் வழங்கப்பட்டன. வந்திருந்தவர்கள் ஆர்வமுடன் சுயமரியாதை கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இவர்கள் விஞ்ஞானிகளாகவும் , மென்பொருள் இணைய வல்லுநர்களாக பணிபுரிகிறார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் அயரா உழைப்பிற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்நிகழ்வு ஒரு பகுத்தறிவு குடும்பவிழாவாக நடந்தேறியது. வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
அமெரிக்காவில் செப்டம்பர் 28 அன்று ‘கிரீன் லெவல்’ ஆரம்பப் பள்ளி பூங்காவில் பெரியார் 146-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
Leave a comment