சென்னை, அக்.1- வடகிழக்கு பருவமழையையொட்டி பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில் மின் இணைப்பு களை கண்காணிக்க வேண்டும். வடிகால்களை சுத்தம் செய்வது அவசியம். மாணவா்களின் பாது காப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் வேண்டும். மக்களை பள்ளிகளில் தங்கவைக்க பள்ளி மற்றும் உணவுக் கூடங்களில் சாவி வைத்திருக்கும் பொறுப்பாளா் விவரங்கள், தொடா்புடைய வரு வாய்த்துறை அலுவலா்களுக்கு அளிக்க வேண்டும்.
பள்ளி மேற்கூரைகளில் தண்ணீா் தேங்குவதைக் கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங் களைப் பயன்படுத்துவதை முற்றிலு மாக தவிா்த்தல் வேண்டும்.
விடுமுறை காலங்களில் பள்ளிக் கட்டடங்களை, குறிப்பாக மேற்கூரையினை தூய்மையாக பராமரிக்க 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா் உதவி யுடன் தேவையான பணிகளை தலைமையாசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.
சிறிய கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கலாம். பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடா் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவா் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம்.
எனவே, சுற்றுச்சுவா் உறுதித் தன்மையைக் கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவா் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற் படுத்த வேண்டும்.
மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப் பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின், அத்த கைய வகுப்பறைகள் மற்றும் கழிப் பறைகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.
மின்வாரியத்தின் துணையுடன் சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீா் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமை யாசிரியா்கள் ஆய்வு செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை அக். 22 முதல் 27-ஆம் தேதிக்குள் தொடங்கும் என எதிா் பாா்க்கப்படுகிறது.